முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா நினைவிடத்தில் மவுன ஊர்வலமாக சென்று கூட்டுறவு ஊழியர்கள் கண்ணீர் அஞ்சலி

ஞாயிற்றுக்கிழமை, 25 டிசம்பர் 2016      சென்னை

சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் கூட்டுறவு பிரிவு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் அதன் மாநில செயலாளர் ‘டி.யூ.சி.எஸ்.’ பி.சீனிவாசன் தலைமையில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

முன்னதாக சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து மலர் வளையத்துடன் மவுன ஊர்வலமாக நினைவிடம் வந்தனர்.

 

நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் அங்கு பொதுமக்களுக்கு ‘டி.யூ.சி.எஸ்.’ பி.சீனிவாசன் உணவு வழங்கினார்.தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை வேளாண்மை, கூட்டுறவு மற்றும் நியாயவிலைக்கடைகள் மாநில அண்ணா தொழிலாளர் சங்கம் சார்பில் மாநில செயலாளர் ‘டி.யூ.சி.எஸ்.’ பி.சீனிவாசன் தலைமையில் கூட்டுறவுப் பிரிவு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று இரங்கல் கூட்டம் நடைபெற்றது.தமிழக மக்களின் நலன் ஒன்றையே முழு மூச்சாக கொண்டு தமது வாழ்நாள் முழுவதும் அருந்தொண்டாற்றி உலக மக்களால் அம்மா என்று போற்றப்பட்ட அம்மா உலகத்தில் ஈடு இணையற்ற தலைவராகவும், உலகம் வியக்கின்ற வகையில் கழகத்தையும் கழகத்தின் ஒன்றரைக்கோடி தொண்டர்களையும் அண்ணா தொழிற்சங்கத்தில் உறுப்பினராக உள்ள 11 லட்சம் பேரையும் மற்றும் தொண்டர்களையும் அரவணைத்து சிறப்பாக வழி நடத்தி 6–வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்று இந்தியாவின் சிறப்புமிக்க முதலமைச்சராகவும், தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் வழி நடத்தி ஏழை எளிய சாமான்ய மக்களின் மற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி என்நாளும் வாழும் வரலாறாக உலக மக்களால் புரட்சித்தலைவி அம்மா என்று அன்போடு அழைக்கப்பட்டு வந்த முதலமைச்சர் தொழிலாளர்களின் விடிவெள்ளி, அம்மா எதிர்பாராதவிதமாக 5–ந்தேதி அன்று அமரர் ஆனதையொட்டி கூட்டுறவுப்பிரிவு அண்ணா தொழிற்சங்கம் அதிர்ச்சியில் எண்ணிலடங்கா துயரம் அடைந்தது. அம்மா ஆத்மா சாந்தியடைய கூட்டுறவுப் பிரிவு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் 5 நிமிடம் மவுன அஞ்சலி மற்றும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது.‘‘மக்களால் நான் மக்களுக்காகவே நான்’’ என்று தவ வாழ்வை மேற்கொண்டு தன் இறுதி மூச்சு உள்ளவரை தமிழக மக்களுக்காகவே வாழ்ந்த புரட்சித்தலைவி அம்மாவின் மறைவிற்குப்பிறகு உள்ள இச்சூழ்நிலையில் அம்மா உயிர்காத்த அன்னையாக கடந்த 33 ஆண்டு காலம் அம்மாவிற்காகவே தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்து அம்மாவிற்கு உற்ற தோழியாக விளங்கியும், அம்மாவின் பொது வாழ்க்கைக்கு உற்ற துணையாக இருந்தும், அம்மா ‘என் தாயைப்போன்று விளங்கி என்னை அரவணைத்து வருபவர்’’ என்று அம்மாவினால் சின்னம்மா என்று புகழுடன் அழைக்கப்படும் அம்மாவிற்காக பல்வேறு இன்னல்களையும், சோதனைகளையும் அனுபவித்த சின்னம்மா, அம்மா, கழகத்தின் பொதுச் செயலாளராகவும் தலைமை ஏற்று தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றும் கழகத்தையும், கழகத்தின் தொண்டர்களையும் வழிநடத்த கோருமாறு கூட்டுறவு பிரிவு அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் வேண்டி கேட்டுக் கொள்கிறோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டுறவுப் பிரிவு அண்ணா தொழிற்சங்க மாநில செயலாளர் ‘டி.யூ.சி.எஸ்.’ பி.சீனிவாசன் தலைமையில் மாநில பொருளாளர் கே.மாரிமுத்து, மாநிலத்தலைவர் வி.சோமசுந்தரம் மற்றும் துணைத்தலைவர்கள் பி.கிருஷ்ணமூர்த்தி, கே.பாஸ்கரன், எம்.பழனிசாமி, சக்திவேல், எம்.பாண்டியன், இணை செயலாளர்கள் ஆர்.சுகுமாரன், ஜே.அசோகன், கே.சி.தணிகாசலம், நாராணயன், துணை செயலாளர்கள் கிருஷ்ணசாமி, ராமச்சந்திரன், கர்ணன், பாலசுப்பிரமணியன், கோவை அரிகிருஷ்ணன், டி.யூ.சி.எஸ். நிர்வாகிகள் எம்.ராஜேந்திரன், ஆர்.ராஜ்குமார், லிபர்டி ராஜு, கே.சுந்தரமூர்த்தி, யு.பாலசுப்பிரமணியம், எஸ்.பூபதி, பி.குணாளன் மற்றும் ஏராளமானபேர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்