திருவண்ணாமலை அருகே இளம்பெண் அடித்துக்கொலை:மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு

ஞாயிற்றுக்கிழமை, 25 டிசம்பர் 2016      திருவண்ணாமலை

 

திருவண்ணாமலை வ.உ.சி. நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (45), இவர் திருவண்ணாமலை அருகே உள்ள கீழ்அணைக்கரையில் இருந்து சாவல்பூண்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் செங்கல்சூளை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை செங்கல் சூளை வழியாக சென்ற பொதுமக்கள், செங்கல்சூளை அருகே சாலையோரத்தில் முகத்தில் ரத்த காயத்துடன் ஒரு இளம்பெண் சடலமாக கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து தண்டராம்பட்டு காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ரூரல் டிஎஸ்பி தேவநாதன் வெறையூர் காவல்துறை ஆய்வாளர் பொறுப்பு சுபபிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுவிசாரணை நடத்தினர். சடலமாக கிடந்த பெண்ணுக்கு சுமார் 35 வயது இருக்கும். இவரது முகம் மற்றும் உடலில் காயங்களும் அவர் அணிந்திருந்த துணி அலங்கோலமாகவும் இருந்தது. மேலும் சடலம் அருகே ரத்தக்கரையுடன் செங்கல் தயாரிக்கப்படும் அச்சு இருந்தது. செங்கல் சூளையில் பொருட்கள் வைக்கும் அறையை சோதனையிட்டபோது அங்கு ரத்தத் தடயங்கள் இருந்தது தெரியவநதது. எனவே மர்ம ஆசாமிகள் இளம்பெண்ணை கடத்தி வந்து செங்கல்துளையில் வைத்து பலாத்காரம் செய்து அடித்து கொலை செய்துவிட்டு பின்னர் சாலையோரம் வீசிவிட்டு சென்றிருக்கலாம் எ போலீசார் சந்தேகிக்கின்றனர். அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது கொலை செய்யப்பட்ட பெண் செங்கல் சூளையில் வேலை செய்யவில்லை என்பதும் இவர் யார் எந்த ஊரை சேர்நதவர் என தெரியவில்லை என தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கொலை செய்யப்பட்ட இளம்பெண் யார் எந்தஊரை சேர்ந்தவர் அவரை கொலை செய்த மர்ம ஆசாமிகள் யார் என்பது குறித்து தீவர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தி.மலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: