முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடியில் தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகளுடன் ஆராதனை கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்

ஞாயிற்றுக்கிழமை, 25 டிசம்பர் 2016      தூத்துக்குடி

 

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகளுடன் கிறிஸ்துமஸ் ஆராதனை நடைபெற்றது.இயேசு கிறிஸ்து இவ்வுலகில் அவதரித்த திருநாளான டிச.25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. எல்லா மக்களுக்கும் விடுதலை நல்வாழ்வு அளித்த இயேசு கிறிஸ்து பிறந்த தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்பட்டது.தூத்துக்குடி மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலிகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தூத்துக்குடியில் உள்ள சின்னகோவில், பனிமயமாதா கோவில், அந்தோணியார் ஆலயம், தூய ததேயு ஆலயம், தூய ஜோசப் ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு சிறப்பு திருப்பலிகள் நடந்தது.தூத்துக்குடி சின்னகோவில் நடைபெற்ற ஆராதனையில் ஆயர் இவோன் அம்புரோஸ் கலந்து கொண்டு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி அளித்தார். மாவட்ட முதன்மை குரு ஆன்ட்ரூ மற்றும் பங்குத் தந்தையர்கள் கலந்து கொண்டனர். பனிமயமாதா கோவிலில் பங்குத் தந்தை லெனின் டீரோஸ் தலைமையில் நடந்தது. புனித அந்தோணியார் கோவிலில் நடைபெற்ற ஆராதனையில் பங்குத் தந்தை ஸ்டார்வின் கலந்து கொண்டு நற்செய்தி அளித்தனர். நள்ளிரவு நடந்த இயேசு கிறிஸ்து பிறந்த நற்செய்தி திருப்பலியில் கிறிஸ்தவர்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.நள்ளிரவு முதல் தொடர்ந்து அதிகாலை வரை தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி, நற்கருணை ஆசீர், நற்செய்தி திருப்பலி மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர். சிறப்பு நற்செய்தி திருப்பலியில் கலந்து கொண்டவர்கள் ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். சிறுவர்-சிறுமியர்கள் பட்டாசு வெடித்தும், புத்தாடை அணிந்தும் ஆட்டம் பாட்டத்துடன் மகிழ்ச்சியாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர்.கிறிஸ்துமஸ் பண்டிகை கோவில்பட்டி, நாசரேத் நாலுமாவடி, உடன்குடி, மெஞ்ஞானபுரம், கூட்டாம்புளி, சாயர்புரம், புதுக்கோட்டை, ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், ஏரல், ஆத்தூர், பழையகாயல், புன்னகாயல், டி.சவேரியார்புரம், ஸ்பிக்நகர், விளாத்திக்குளம், வேம்பார், ஆறுமுகநேரி, அடைக்கலாபுரம், சாத்தான்குளம், சிலுவைப்பட்டி, உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago