முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நல்ல வரவேற்புடன் நடந்து முடிந்த நெல்லை புத்தகத் திருவிழா

ஞாயிற்றுக்கிழமை, 25 டிசம்பர் 2016      திருநெல்வேலி

 

நெல்லை:நெல்லையில் கடந்த 14ஆம் தேதி தொடங்கி சனிக்கிழமை (டிச.24) வரை நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ரூ. 30 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன. விழாவின் நிறைவு நாளான சனிக்கிழமை கண்காட்சி அரங்குகள் முழுவதும் நிரம்பி வழிந்தன.நெல்லையில் மக்கள் வாசிப்பு இயக்கம், முன்னேற்றப் பதிப்பகம் ஆகியவை இணைந்து "வாசிப்பை வழக்கமாக்குவோம்’ என்ற இலச்சினை வைத்து புத்தகத் திருவிழா நடைபெற்றது ,பாளை செல்வி மஹாலில் இந்த புத்தகத் திருவிழா தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு மக்கள் வரவேற்பை பொருத்து 10 மணியளவில் வரை கூட நீடித்தது.தமிழகத்தின் அனைத்து பதிப்பகங்களைச் சேர்ந்த நூல்களும் இடம் பெறும் வகையில் பதிப்பகத்தினர் மட்டுமல்லாது விற்பனையாளர்களையும் ஒருங்கிணைந்து அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.3 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றிருந்தன. தமிழ், ஆங்கிலத்தில் அரசியல், வரலாறு, சமூகம், பொருளாதாரம், தலைவர்கள், இயக்கம், மொழி, இனம், ஆன்மிகம், குழந்தைகள் உலகம் என அனைத்து புத்தகங்களும் விற்பனை செய்யப்பட்டன. இவைத் தவிர கல்வி தொடர்பான குறுந்தகடுகள் விற்பனைக்கான இரு அரங்குகளும் இடம் பெற்றிருந்தன. இதன் ஒரு பகுதியாக தினமும் மாலையில் பிரசித்தி பெற்ற இலக்கிய ஆளுமைகளை அழைத்து வந்து கலந்துரையாடல், வாசகர் சந்திப்பு நிகழ்வையும் நடத்தினர். நிறைவு நாளில் எழுத்தாளர் திவான்,மக்கள் மருத்துவர் ராமகுரு, பேராசிரியர் தங்கமுனியாண்டி, மக்கள் வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வீரபாலன், கவிஞர் கிருஷி, எழுத்தாளர் நாறும்பூநாதன் ஆகியோர் உரையாற்றினர். கிறிஸ்துமஸ் விழாவுக்கு முந்தைய நாள் என்பதால் வழக்கத்தைவிட இருமடங்கு கூட்டத்தை காண முடிந்தது. தேவாலயங்கள், கடை வீதிகளுக்கு வந்த பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் தவறாமல் கண்காட்சிக்கு வந்து விரும்பிய புத்தகங்களை குழந்தைகளுக்கு பெற்றுத் தந்தனர். இதனால், வழக்கத்தைவிட இரவு நீண்ட நேரம் விற்பனை நடைபெற்றது. மாநகர மக்களிடையே இந்தப் புத்தகத் திருவிழா மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago