முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 25 டிசம்பர் 2016      நீலகிரி
Image Unavailable

ஏசு பெருமான் அவதரித்த தினமான டிசம்பர் 25_ந் தேதியை உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கடந்த ஒரு மாத காலமாக கிறிஸ்தவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு சென்று பாட்டுப்பாடி ஆசி வழங்கி வந்தனர். இந்த நிலையில் கிறிஸ்துமஸ் தினமான நேற்று முன்தினம் நடுஇரவு ஊட்டி வண்டிச்சோலையில் கிறிஸ்துவ தேவாலயமான சேக்ரட் ஹார்ட் தேவாலயத்தில் விசேஷ திருப்பலி நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் ஏராளமான கிறிஸ்துவ பெருமக்கள் கலந்து கொண்டு பிராத்தனை செய்தனர். அதேபோல் மேரீஸ்ஹில் பகுதியில் உள்ள புனித மோட்சராக்கினி ஆலயம், சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ ஆலயம், கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள ஸ்டீபன் தேவாலயம் உட்பட ஊட்டியில் உள்ள அனைத்து கிறிஸ்துவ தேவாலயங்களிலும் சிறப்பு பிராத்தனைகள், திருப்பலிகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நேற்று காலையில் கிறிஸ்துவ பெருமக்கள் புத்தாடை அணிந்து மீண்டும் தேவாலயங்களுக்குச் சென்று சிறப்பு பிராத்தனையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். விழாவினையொட்டி அனைத்து தேவாலயங்களும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டங்கள் ஊட்டியிலுள்ள பல்வேறு நட்சத்திர ஓட்டல்களிலும் கொண்டாடப்பட்டது. ஜெம்பார்க் ஓட்டலில் பொதுமேலாளர் இஸ்மாயில் கான் தலைமையில் ஓட்டல் அலுவலர்கள், ஊழியர்கள், சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டு அனைவருக்கும் கிறிஸ்மஸ் கேக் வழங்கி கொண்டாடினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்