ஈரோடு மாவட்டம்பெருந்துறை பகுதியில் ரூ.10 கோடியில் தென்னை நார் கிளஸ்டர் உருவாக்க திட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 25 டிசம்பர் 2016      ஈரோடு
தென்னை நார்

ஈரோடு, திருப்பூர் மாவட்ட தேங்காய்நார் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 4வது பொதுக்குழு கூட்டம் மற்றும் சிறுதொழில் கூட்டு அபிவிருத்தி திட்ட ஆலோசனை கூட்டம்  ஈரோடு ஈடிசியா அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் பூச்சாமி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் ராசுமணி கலந்து கொண்டு பேசினார். இதுகுறித்து சங்கத்தின் தலைவர் பூச்சாமி செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தேங்காய்நார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது.

 ரூ.10 கோடியில் தென்னை நார் கிளஸ்டர்

இந்த  மாவட்டங்களை மையமாக கொண்டு பெருந்துறை பகுதியில் ரூ.10 கோடியில் தென்னை நார் கிளஸ்டர் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மத்திய சிறு, குறு  மற்றும் நடுத்தர நிறுவனம் சார்பில் 60 சதவீத மானியமும், மாநில அரசு சார்பில் 5 சதவீத மானியமும், தொழிற்சாலைகள் சார்பில் 35 சதவீத முதலீட்டுடன்  இந்த கிளஸ்டர் விரைவில் தொடங்கப்படும். இந்த கிளஸ்டர் மூலம் தென்னை நாரில் இருந்து தயாரிக்கப்படும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களான கயிறு, கயிறு  வலை, மிதியடி, கயிறு உருண்டை, நீடில் பெல்ட் ஆகியவை இங்கு தயாரிக்கப்படவுள்ளது. கடந்த ஆண்டில் நாடு முழுவதும் இருந்து 86 நாடுகளுக்கு 960 கோடி ரூபாய்க்கு தென்னைநார்கள், நார்சோறு கட்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில் 25 சதவீதம் ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ரொக்கமில்லா பண பரிமாற்ற நடவடிக்கைக்கையை  நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். அடுத்த மாதம் முதல் ஆலையில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் அவர்களது வங்கி கணக்கில் ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். எங்களது தொழில் ரீதியான அனைத்து பணபரிமாற்றத்தையும் ஆன்லைன் மூலம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்  தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் செயலாளர் தனசேகரன், பொருளாளர்  சதாசிவம் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: