முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நம்பியூர் வட்டாரத்தில் 2400 விவசாயிகளின் வயல்களில் மண் மாதிரிகள் எடுக்கத்திட்டம் ‚

ஞாயிற்றுக்கிழமை, 25 டிசம்பர் 2016      ஈரோடு

                         

நம்பியூர் வட்டாரத்தில் வேளாண்துறை சார்பில் இலவசமாக 2439 மண்மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்படும் என நம்பியூர் , வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்தார்.

                          உலக மண் வள தினத்தையொட்டி கோபியை அடுத்த நீலாம்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது.

                          ‘மண் வளமறிந்து உரமிடவதற்கு மண்மாதிரி எடுத்து ஆய்வு செய்து சத்துக்களை அறிந்து கொள்வது அவசியமாகும். தற்போது வருவாய் கிராமம் வாரியாக குறிப்பிட்ட இடைவெளியில் விவசாயிகளின் வயல்களில் இலவசமாக மண்மாதிரிகள் எடுக்கப்பட்டு அதன் முடிவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மண் சத்துக்களை அறிந்து அதற்கேற்ப உரமிடுவதால் உரச்செலவுகள் குறைந்து , பயிர் மகசூலும் அதிகரிக்கிறது. மேலும் , மண்ணின் களர் - உவர் தன்மை அறிந்து அதற்கேற்ப சாகுபடி முறையை அமைத்துக் கொள்ளலாம். மண் மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்ப விரும்பும் விவசாயிகள் உடனடியாக நம்பியூர் வேளாண்மை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் “ என்றார்.

                          நிகழ்ச்சியில் மண் மாதிரி பரிசோதனை முடிவு அட்டைகளை அவர் விவசாயிகளுக்கு வழங்கினார் (படம் இணைப்பு).

                          நீலாம்பாளையம் , பள்ளிபாளையம் , கெட்டிச்செவியூர் , சின்னாரிபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் கலந்து கொண்டனர்.

                          முன்னதாக நம்பியூர் வேளாண்மை அலுவலர் ஜீவதயாளன் வரவேற்புரையாற்றி , வேளாண்மைத்துறை திட்டங்களை எடுத்தக் கூறினார்.

                          நிறைவாக கெட்டிசெவியூர் உதவி வேளாண் அலுவலர் மூர்த்தி நன்றி கூறினார்.

                          ஏற்பாடுகளை அட்மா திட்ட பணியாளர்கள் கங்கா , அருண்குமார் , மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்