முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிட்டனின் பிரபல பாப் பாடகர் ஜார்ஜ் மைக்கேல் மரணம்!

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2016      உலகம்
Image Unavailable

லண்டன்  -  பிரிட்டனின் பிரபல பாப் பாடகர் ஜார்ஜ் மைக்கேல் காலமானார். அவருக்கு வயது 53

 வாழ்க்கை வரலாறு :
பாடகர் ஜார்ஜ் மைக்கேல் தமது இசைக் குழு மூலமாக உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானார். ஜார்ஜ் மைக்கேலின் ஆல்பம்கள் கோடிக்கணக்கில் விற்பனை ஆகியுள்ளது.ஜார்க் மைக்கேலின் இயற்பெயர், ஜார்ஜியஸ் கிரியாசோசிஸ் பனயியோடோ ஆகும். "வேக் மி அப் பிஃபோர் யூ கோ-கோ அன்டுகேர்லெஸ் விஸ்பர்" போன்ற ஆல்பம் அவருக்கு உலகளாவிய அளவுக்கு ரசிகர் வட்டத்தை பெற்றுக் கொடுத்தது.

1987ல் முதல் முறையாக பாப் இசைக்குள் நுழைந்தார் ஜார்ஜ் மைக்கேல்.
அவரது முதல் ஆல்பம் 'ஃபெய்த்' 10 மில்லின் காப்பிகள் விற்பனையாகி சாதனை படைத்தது.உலகம் முழுவதும் மக்கள் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடி கொண்டிருந்த நிலையில் ஜார்ஜ் மைக்கேல் உயிர் பிரிந்துள்ளது. உடல்நலக் குறைவுக் காரணமான நீண்ட காலமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த மைக்கேல் உயிரிழந்துள்ளார். ஜார்ஜ் மைக்கேலின் செய்தி தொடர்பாளர் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்