கோவில்பட்டியில் முப்பெரும் விழா

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2016      வேலூர்
kvp

கோவில்பட்டி

கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் பெதஸ்தா பவுண்டேசன் சார்பாக மாற்றுத்திறனாளிகள் தினவிழா கிறிஸ்துமஸ் விழா 2017 புத்தாண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

நிகழ்வுக்கு பாண்டவர்மங்கலம் ஊர் நாட்டாமை அந்தோணி தலைமை தாங்கினார். இலக்கிய உலா இயக்குநர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். பெதஸ்தா பவுண்டேசன் நிறுவனர் சூசை மாணிக்கம் அனைவரையும் வரவேற்றார். கோவில்தர்மகத்தா சுப்புராஜ், பஞ்சாயத்து அலுவலக எழுத்தர் துரைமுருகன், பிசியோதிரபிஸ்ட் காளிராஜ், எட்டையாபுரம் முத்தூட்மினி பைனான்ஸ் நிறுவன கிளை மேலாளர் நவநீதகிரு~;ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

          இலக்கிய உலாரவீந்தர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பரிசளித்து பாராட்டுரை வழங்கினார். முன்னதாக மாற்றுத்திறனாளிகளுக்கான கோலப்பட்டி, பந்து எடுத்தல், இசைநாற்காலி, பாட்டிலில் நீர் நிரப்புதல் போட்டிகளும் பெற்றோர்களுக்கான இசை நாற்காலி போட்டி, கபடிப் போட்டி உட்பட பல போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்கள் பரிசுகள் வழங்கினர். நிறைவாக பெதஸ்தா பவுண்டேசன் மேலாளர் கமலா சூசைமாணிக்கம் நனறி கூறினார். ஆசிரியர்கள் செல்வகுமார் சுலேகா, விஜயராணி, மரகதம் உள்பட பெற்றோர்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: