முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2016      திருநெல்வேலி

திருநெல்வேலி,

திருநெல்வேலி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு  தமிழக ஆளுநர் சி.எச்.வித்யாசாகர் ராவ்  வருகை. முன்ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர்  மு.கருணாகரன்  தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலெக்டர்  பேசியதாவது:

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 28.12.2016 அன்று காலையில் நடைபெறும் 24-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள  தமழிக ஆளுநர் சி.எச்.வித்யாசாகர் ராவ்  வருகை தரவுள்ளார்கள்.   வருகையின்போது  தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை அலுவலர்கள் செய்திட வேண்டும். தீயணைப்புத்துறையினர் மூலம்  தமிழக ஆளுநர்  ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் இடம், பட்டமளிப்பு விழா நபெறும்  கலையரங்கம்  உள்ளிட்ட  செல்லும் இடங்களில் தேவையான தீ பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொதுப்பணித்துறையினர் தங்குமிடம், விழா நடைபெறும் இடங்களின் உறுதித் தன்மையை உறுதி செய்திட வேண்டும்.

மாநகராட்சியின் மூலம் தேவையான சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவத்துறையின் மூலம் ஒரு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் வசதியுடன் ஒரு மருத்துவக்குழு விழா நடைபெறும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்குள் தயார் நிலையில் இருக்க வேண்டும். விழா நடைபெறும் நாளில் மின்சார வாரியத்தினால் தடையற்ற மின்சாரம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திட வேண்டும் என தெரிவித்தார்;.                 இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.க.குழந்தைவேல், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியம், திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் செல்வி. பெர்மி வித்யா, மாநகர  காவல் துணை ஆணையர் இளங்கோ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சீனிவாசன், பல்கலைக்கழக பதிவாளர்   ஜான் பிரிட்டோ, துணை பதிவாளர்  ஸ்ரீதர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்  பாஸ்கர் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்