முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்களை கலெக்டர் இரா.கஜலட்சுமி பாராட்டு

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2016      காஞ்சிபுரம்
Image Unavailable

தமிழகக் கல்லூரி மாணவ/மாணவியர்களிடையே படைப்பாற்றலையும், பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கில் கல்லூரியில் பயிலும் மாணவர்களிடையே கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் தமிழ்வளர்ச்சித்துறை சார்பாக ஆண்டுதோறும் நடத்தப்பெற்று பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் அனைத்து கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடையே 2016-2017ம் ஆண்டிற்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் (23.12.2016) அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றன. கவிதைப்போட்டி முதல் பரிசை செல்வி.வி.விஜயபாரதி, வள்ளியம்மை பொறியியல் கல்லூரி-காட்டாங்கொளத்தூர், இரண்டாம் பரிசு செல்வன்.க.தமிழொளி, சங்கார கலை மற்றும் அறிவியல் கல்லூரி-ஏனாத்தூர், கட்டுரைப்போட்டி முதல் பரிசை செல்வி.ர.துஸ்யந்தினி, அப்பல்லோ கலைக் கல்லூரி-மேவலூர்குப்பம், இரண்டாம் பரிசு செல்வன்.அ.குணசேகரன்,சென்னை கிறித்துவ கல்லூரி-தாம்பரம், பேச்சுப்போட்டி முதல் பரிசை செல்வன்.மு.முனீசுவரன்,அரசு சட்டக்கல்லூரி- செங்கல்பட்டு, இரண்டாம் பரிசு செல்வி.ம.யோகேஸ்வரி, வேல் பல்கலைக்கழகம்- பல்லாவரம், ஆகியோர் வெற்றி பெற்றனர். நேறறு மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 2016-2017 ஆம் ஆண்டிற்கான கல்லூரி மாணவ-மாணவர்களிடையே நடைபெற்ற கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000/-மும், இரண்டாம் பரிசு ரூ.7,000/-மும் என மொத்தம்

ரூ.51,000/-க்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி., மாணவ-மாணவியர்களுக்கு வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.சௌரிராஜன், தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் தி.உமா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்