முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதார் மூலம் பரிவர்த்தனை மொபைல் ஆப் அறிமுகம்

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2016      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி - ஆதார் எண்ணை மட்டுமே கொண்டு பணமில்லா  டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்வதற்கான புதிய மொபைல் ஆப்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் புழக்கத்தில்  இருந்த ரூ500, ரூ 1000 பழைய நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பின்னர், பணமில்லா டிஜிட்டல் பரிவர்த்தனையை  அதிகரிக்க மத்திய அரசு தீவிரம் காட்டியுள்ளது. கரன்சி தட்டுப்பாடு காரணமாக டெபிட், கிரடெடிட் கார்டுகள் மற்றும் இண்டெர் நெட் , மொபைல் பேங்கிங் மூலமாக டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ள நகர்ப்புற மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இந்த நிலையில், ஆதார் எண்ணை கொண்டு டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ள புதிய மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதற்கு ஆதார்  பேமண்ட் அப்சை மொபைல் போனில் டவுன் லோடு செய்ய வேண்டும். அதனுடன் பயோ மெட்ரிக் ரீடரை இணைக்க வேண்டும். பின்னர் வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை  செலுத்த ஆதார் எண் மற்றும்  வங்கி கணக்கை குறிப்பிட்டு பணத்தை பரிமாற்றம் செய்யலாம். ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைத்தவர்கள் மட்டுமே இந்த சேவையை பயன்படுத்த முடியும்.தற்போது 40 கோடி ஆதார் எண்கள் வங்கி கணக்கில்  இணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்