முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 128 நபர்களுக்கு ரூ.1.68 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்:கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2016      நாமக்கல்
Image Unavailable

 

நாமக்கல்:நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்்று(26.12.2016) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையேற்று பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்.இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை வேண்டியும், குடிசை மாற்று வாரியத்தில் வீடு வேண்டியும், புதிய குடும்ப அட்டைகள் வேண்டியும், குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மொத்தம் 544 மனுக்கள் வரப்பெற்றன.இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட ஊராக வளர்ச்சித்துறையின் சார்பில் சென்னையில் வர்தா புயல் நிவாரணப்பணியில் 65 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றியதை பாராட்டி பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்ட பாராட்டுச்சான்றிதழ்களையும், கல்வித்துறையின் சார்பில் 2015-16 ஆம் கல்வி ஆண்டில் தொடக்க கல்வித்துறையால் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்ட சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், வடுகப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மோகனூர் ஊராட்சி ஒன்றியம், பனைமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் இராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், கொழிஞ்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளுக்கு கேடயங்களையும் கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்.வருவாய்த்துறையின் சார்பில் திருச்செங்கோடு, அர்த்தநாரிஸ்வரர் கோவில் பாழியில் எதிர்பாரதவிதமாக மூழ்கி மரணமடைந்த கோகுலகண்ணன், சுதர்சன் ஆகியோரின் பெற்றோர்களான சுசீலா மற்றும் சித்ரா ஆகியோர்களிடம் தலா ரூ.50,000 வீதம் ரூ.1.00 இலட்சம் முதலமைச்சர் நிவாரண நிதியுதவிக்கான காசோலைகளையும், கொல்லிமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து பணியிடையில் மரணமடைந்த ராம்சேகர் என்பவரின் மனைவி கே.சித்ராதேவி என்பவருக்கு சேந்தமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிவதற்கான பணிநியமன ஆணையினையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 9 மகளிருக்கு தலா ரூ.3260 வீதம் ரூ.29,340 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களையும், நாமக்கல் வட்ட வழங்கல் அலுவலகத்தின் சார்பில் 17 நபர்களுக்கும், பரமத்தி வேலூர் வட்ட வழங்கல் அலுவலகத்தின் சார்பில் 10 நபர்களுக்கும் என மொத்தம் 27 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளையும் கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்.

 

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) நா.பாலச்சந்திரன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கே.எஸ்.முரளி கிருஷ்ணன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் எஸ்.அசோகன், உதவி ஆணையர் (கலால்) புகழேந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் க.சுப்பிரமணி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்