ஹனுமன் ஜெயந்தியைமுன்னிட்டு ஈரோட்டில் 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரம்

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2016      ஈரோடு

ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஈரோட்டில் 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஹனுமன் ஜெயந்தி வரும் டிசம்பர் 28-ஆம் தேதி (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள். கூட்ட நெரிசலைத் தவிர்க்க தேவையான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.

இக்கோயிலில் ஹனுமன் ஜெயந்தியன்று பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு, கயிறு, செந்தூரம் வழங்கப்படும். இதற்காக, ஆஞ்சநேயர் கோயிலின் வார வழிபாட்டுக் குழு சார்பில் ஈரோடு சம்பத் நகரில் உள்ள திருமண மண்டபத்தில் லட்டுகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

50 ஆயிரம் லட்டுகள்

 இது குறித்து வார வழிபாட்டுக் குழுவின் தலைவர் சிற்றரசு கூறியதாவது

இந்த ஆண்டு ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, 15 மூட்டை சர்க்கரை, 30 மூட்டை கடலை மாவு, 30 கிலோ நெய், 30 டின் ஆயில், 25 கிலோ முந்திரி, திராட்சை ஆகிய பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பணிகளில் 50க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்களுக்கு லட்டு, ஆரஞ்சு நிறக்கயிறு,செந்தூரம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்படும் என்றார்.கம், இவரது மனைவி சாந்தி, இவர்களது மகன் கார்த்திக் ஆகிய 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை ஈரோடு மகளிர் கோர்ட்டு நீதிபதி திருநாவுக்கரசு நேற்று விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட சண்முகம், சாந்தி, கார்த்திக் ஆகிய 3 பேருக்கும் 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரமும் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 2 வருடம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் தனது தீர்ப்பில் கூறி உள்ளார்.இந்த வழக்கில் அரசு வக்கீல் சுமதி ஆஜரானார்

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: