முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்:கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2016      கிருஷ்ணகிரி
Image Unavailable

 

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர்; சி.கதிரவன் ., தலைமையில் (26.12.2016 ) நடைபெற்றது. இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் குடிநீர் வசதி, மின்வசதி, பட்டா வேண்டியும், கல்வி உதவித் தொகை, ஓய்வூதியத் தொகை, இலவச தையல் எந்திரம், சலவைப் பெட்டி, வேலை வேண்டியும் மற்றும் சாலை வசதி வேண்டியும், மின் இணைப்;பு, வீட்டுமனைப்பட்டா, பல்வேறு கோரிக்கைகள் உள்ளிட்ட மொத்தம் 203 மனுக்களும் , மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 8- மனுக்களும் ஆக மொத்தம் 211- மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்.தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் சார்பாக இயற்கை மரணமடைந்த இரு குடும்பங்களுக்கு தலா ரூ. 17 ஆயிரம் வீதம் ரூ.34 ஆயிரத்திற்கான காசோலையும், மாற்றுதிறனாளி ஒருவருக்கு மாதாந்திர ஓய்வூதிய தொகையாக ரூ. 1500 க்கான காசோலைகள் என மொத்தம் 3 மாற்றுதிறனாளிகளுக்கு ரூ. 35,500 க்கான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சி.கதிரவன் ., வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சூ.கிருஷ்டி, கலெக்டர் நேர் முக உதவியாளர் (பொது) த.சாந்தி, தனித்துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்பு) ம.வசந்தா, உதவி ஆணையர் ( ஆயம்) முருகேசன், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்