முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்ட, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2016      கோவை

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில், மக்கள் குறைதீர்க்கும்  நாள்  கூட்டம்  மாவட்ட  கலெக்டர்  ச.ஜெயந்தி,   தலைமையில்  நேற்று (26.12.2016) நடைபெற்றது.

உதவி தொகை

                   இக்கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும்  முதியோர் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை வேண்டியும், சாலைவசதி, குடிநீர் வசதி வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழங்கப்பட்ட 750  மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட  கலெக்டர்   அதன் மீது உரிய நடவடிக்கையினை,  உடனடியாக  மேற்கொள்ள  தொடர்புடைய துறை  அலுவலர்களுக்கு  அறிவுறுத்தினார்.

                      மேலும், திருப்பூர் தெற்கு சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 11 பயனாளிகளுக்கு ரூ.1,32,000/-மதிப்பில் மாதாந்திர முதியோர் உதவித்தொகை மற்றும் விதவை உதவித்தொகையினையும், மற்றும் திருப்பூர் வடக்கு சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு  ரூ.48,000/- மதிப்பில் மாதாந்திர மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் விதவை உதவித்தொகைகள் என 15 பயனாளிகளுக்கு ரூ.1,80,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர்  வழங்கினார்கள்.

           இக்கூட்டத்தில்  சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துனை கலெக்டர் சுகவனம், துனை கலெக்டர்கள் சரவணன், பழனியம்மாள், காமாட்சிதாசன், அசோகன் உள்ளிட்ட அனைத்து  அரசுத்துறைகளின் அலுவலர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago