முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரூர் அருகே மான் வேட்டையாடியவர் கைது

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2016      தர்மபுரி

 

தருமபுரி மாவட்டம் அரூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் தொடர்ந்து வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக அரூர் மாவட்ட, வன அலுவலர் செல்வி செண்பகபிரியாவுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து செண்பகபிரியா உத்தரவின்படி, மொரப்பூர் வனச்சரகர் கிருஷ்ணன்,தீர்த்தமலை வணசரகர் குமாரவேல் தலைமையில் வானவர்கள் வேடியப்பன், சுப்பிரமணி, வந்க்காப்பாளர்கள் கன்னியப்பன், கிருஷ்ணன்,மணிக்கண்ணன், செவத்தான், செல்வராஜ் உள்ளிட்டோர் அடங்கிய வனத்துறையினர், பொய்யப்பட்டி காப்புக்காட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது இரண்டு நபர்கள் ச்னதேகத்திற்குரிய வகையில் வனப்பகுதில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். இவர்கள் மீது சந்தேகமடைந்த வனத்துறையினர் அவர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்பொழுது ஒரு பெரிய டீசல் கேனில் மாநை வேட்டையாடி இறைச்சி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து சித்தனை செய்தபோது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மேலும் பிடிபட்ட நபரை விசாரித்தபோது, அவர் சட்டையம்பட்டியை சேர்ந்த மாதையன் மகன் இடும்பன் என்பதும், தப்பி ஓடியவர் தாரமங்கலம் பகுதியை சேர்ந்த வைத்தி மகன் மாதேஷ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, இடும்பனை வனத்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட இடும்பநிடமிருந்து நாற்பது கிலோ மான் இறைச்சியும், ஒரு இருசக்கர வாகனத்தையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்