திருவண்ணாமலையில் புதிய ஏஎஸ்பி பதவியேற்பு

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2016      திருவண்ணாமலை

ஏஎஸ்பியாக ரவாளி பிரியா கந்தப்புனேனி நேற்று பதவியேற்றுக் கொண்டார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரவாளி பிரியா கந்தப்புனேனி. இவர் கடந்த 2013ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். அதன்பின்னர் 2015ஆம் ஆண்டு சென்னை வண்டலூரிலுள்ள தமிழ்நாடு காவல் பயிற்சி பள்ளியில் அடிப்படை பயிற்சி பெற்றார். பின்னர் கடந்த 6 மாதமாக திண்டுக்கலில் காவல்நிலைய பயிற்சி பெற்றுவந்தார். அதனைத் தொடர்ந்து இவர் தற்போது திருவண்ணாமலை உதவி காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். இவருக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை முத்து விநாயகர் கோவில் தெருவிலுள்ள காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு சென்று அங்கு காவல் உதவிகண்காணிப்பாளராக ரவாளி பிரியா கந்தப்புனேனி பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு திருவண்ணாமலை நகர காவல்துறை உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல்துறை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: