முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் 12வது பட்டமளிப்பு விழாவில் 39,612 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள்:கவர்னர் முனைவர்.சி.எச்.வித்யாசாகர் ராவ் வழங்கினார்

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2016      வேலூர்

வேலூர் மாவட்டம் சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழக 12-வது பட்டமளிப்பு விழா நேற்று திருவள்ளுவர் பல்கலைக்கழக வளாகத்தில் கவர்னர் திருவள்ளுவர் பல்கலைக்கழக வேந்தர் முனைவர்.சி.எச்.வித்யாசாகர் ராவ் தலைமையில் நடைபெற்றது.

 

இந்த பட்டமளிப்பு விழாவிற்கு தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சிறப்புரையாற்றினார்கள்.இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு நேரில் அனுமதிக்கப்பட்ட 105 முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கும், 32 இளங்கலை மற்றும் 20 முதுகலை பட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளுடன் பட்டங்களையும் மேதகு ஆளுநர் வழங்கினார்கள். திருவள்ளுவர் பல்கலை கழக 39,612 மாணவ மாணவிகளில் 387 பட்டயப்படிப்பு மாணவர்களுக்கும், 30,744 இளங்கலை பயின்ற மாணவர்களுக்கும், 6,679 முதுகலை பயின்ற மாணவர்களுக்கும், 1,697 ஆய்வியல் நிறைஞர்கள் நேரில் அனுமதிக்கப்படாத மாணவர்களுக்கும் தமிழக ஆளுநர் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழக வேந்தர் முனைவர்.சி.எச்.வித்யாசாகர் ராவ் பட்டங்களை வழங்கினார்கள்.

 

இவ்விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

"மக்களால் நான் மக்களுக்காகவே நான்" என்ற தாரக மந்திரத்தை தன் வாழ்வாக கொண்டு தவ வாழ்வு வாழ்ந்த டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் 2002 ஆம் ஆண்டு இந்த திருவள்ளுவர் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது. ஈரடி குறளால் தமிழை உலகறிய செய்தவர் திருவள்ளுவர். திருவள்ளுவருக்கும், அவர் எழுதிய திருக்குறளுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் இப்பல்கலைக்கழகத்திற்கு "திருவள்ளுவர் பல்கலைக்கழகம்" என பெயர் சூட்டி அழகு பார்த்தவர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா. "தீரமிக்க வாழ்வு, தியாக வாழ்வு" என்றால் அது புரட்சித் தலைவி அம்மா அவர்களத்தான் குறிக்கும். இன்று தமிழ்நாட்டை, இந்தியாவின் அறிவுத் தலைநகரமாக மாற்றிக் காட்டியவர் முததல்வ உயர்கல்வியைப் பொறுத்தவரை, எல்வோருக்கும், சமமான, தரமான, வேலை வாய்ப்புக்கு ஏற்ற வகையிலான உயர்கல்வி வழங்க வேண்டும் என்பதுதான் அம்மா அவர்களின் விருப்பமாகும். இந்த சிந்தனையை, தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தி இந்தியாவுக்கே முன்னோடியாகவும், முன்மாதிரியாகவும் தமிழ்நாட்டை திகழச் செய்தவர் திகழ்பவர் முதல்வர் ஜெயலலிதாபுரட்சித் தலைவி அம்மா! இந்தியாவில், மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் - ஆர்சுனு – யின் 2014-2015 கணக்குப்படி, மொத்தம் 757 பல்கலைக்கழகங்கள் 29,506 கல்லூரிகள் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும், 58 பல்கலைக்கழகங்கள், 2,470 கல்லூரிகள் உள்ளன. இதில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 67 கல்லூரிகளைப் புதியதாகத் தொடங்கி மாபெரும் வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள் புரட்சித் தலைவி அம்மா! இப்படி பார்க்கின்ற போது, இந்திய அளவில் 18 முதல் 23 வயதிற்குட்பட்ட மக்கள் தொகையில், சராசரியாக ஒரு இலட்சம் மக்கள் தொகைக்கு 27 கல்லூரிகள் என்ற நிலையில், தமிழ்நாடு அதையும் தாண்டி 37 கல்லூரிகள் என்ற நிலையை எட்டி, முதன்மையிடத்தினைப் பெற்றுள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியில் தேசிய பல்உயிரிகள் ஆணைய முதன்மையர் முனைவர்.செல்வி.பி.மீனாகுமாரி, உயர்கல்வித் துறை செயலாளர் ஏ.கார்த்திக், கலெக்ட்ர் சி.அ.ராமன்,திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர்.கே.முருகன் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago