முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா: கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில் நடைபெற்றது

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2016      கன்னியாகுமரி
Image Unavailable

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில், சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா நிகழ்ச்சிமாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமையேற்று, கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்   பேசும்போது தெரிவித்ததாவது:-

தமிழக அரசு சிறுபான்மையினர் நலன் கருதி, சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக பல்வேறு திட்டங்களை அறிவித்து, சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக சிறுபான்மையினர் மக்கள் உரிமை கொண்டாட, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம்  18-ம் தேதி சிறுபான்மையினர்கள் உரிமைகள் தினவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

மேலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக, உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தின் மூலம், தமிழ்நாட்டில் உள்ள பள்ளி வாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆசிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் முஜாவர் ஆகியோருக்கு விபத்து ஈட்டுறுதியின் கீழ் நிவாரணம், கல்வி உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கண் கண்ணாடி செலவு தொகை மற்றும் முதியோர் உதவித்தொகைகளையும், இந்த வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளும், முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக, வயது முதிர்ந்த ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்ட முஸ்லீம் மகளிர் நலனுக்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம்;, மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  மேலும் தனி நபர் கடன், சிறு வணிகக்கடன், கல்விக்கடன் போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம், அரசு சிறுபான்மையினர் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசு  நபர் ஒருவருக்கு ரூ.20000- ஒரு குடும்பத்தில் 4 நபர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.

 பின்னர், டாப்செட்கோ மூலம் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், 7 சிறுபான்மையினர் உறுப்பினர்களுக்கு தலா ரூ.50 ஆயிரத்திற்கான காசோலைகளையும், 9 சிறுபான்மையினர்                  மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.77,500-க்கான காசோலைகளையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்  சோ.இளங்கோ, ஜெருசேலம் புனித பயண குழு உறுப்பினர் மற்றும் மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்  ஏ.ஜஸ்டின் செல்வராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்)  நிஜாமுதீன், வழக்கறிஞர் மற்றும் திருவருட்பேரவை நிறுவனர் மற்றும் இணைச் செயலாளர்  மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம்  எம்.அகமதுகான், புனித பீட்டர் பால் சர்ச் சரல் அருட்தந்தை உபால்டு, தலைவர், குமரி மாவட்ட உலமா சபை மௌலவி  ஆர்.என்.கே. அபுஸாலிக் பாசில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்  பெ.வே. சரவணன், எஸ். முஹைதீன் ஷாஹ_ல் ஹமீது உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்