முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்டஊராட்சிகளில் ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள்: கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2016      நாமக்கல்
Image Unavailable

 

நாமக்கல்:நாமக்கல் மாவட்டம், பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வீரண்ணம்பாளையம், பிள்ளைக்களத்தூர், பில்லூர், குன்னமலை, சித்தம்பூண்டி, செருக்கலை மற்றும் கோலாரம், ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டம், பரமத்தி ஊராட்சி ஒன்றியம், வீரண்ணம்பாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.17.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய கிராம ஊராட்சி சேவை மையக்கட்டிடப்பணி மற்றும் ரூ.11.38 இலட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் பணியினையும், பிள்ளைக்களத்தூர் ஊராட்சி, ஆதிதிராவிடர் காலனி பகுதியில் 14-வது மானிய நிதிக்குழுத்திட்டத்தின் கீழ் ரூ.2.16 இலட்சம் மதிப்பீட்டில் விசைப்பம்பு அமைத்து குடிநீர்க்குழாய்கள் பதித்து 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியினையும், இதே ஊராட்சி, மேட்டுப்பாளையம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 3 பயனாளிகள் தலா ரூ.1.35 இலட்சம் வீதம்; ரூ.4.05 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆடு கொட்டகைகளையும், பில்லூர் ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.34.58 இலட்சம் மதிப்பீட்டில் பில்லூர் சமுதாயக்கூடம் முதல் இராயர் காடு வரை அமைக்கப்பட்டுள்ள சாலை மேம்பாட்டுப் பணியினையும், குன்னமலை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.55 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய கிராம ஊராட்சி சேவை மையக்கட்டிடப்பணியினையும், சித்தம்பூண்டி ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் சித்தம்பூண்டி மேட்டுத்தெரு அருந்ததியர் தெரு முதல் சோளசிராமணி சாலை வரை அமைக்கப்பட்டுள்ள சாலை மேம்பாட்டுப் பணியினையும், செருக்கலை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.4.91 இலட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடப்பட்டு நீர் ஊற்றி பராமரிக்கப்பட்டு வரும் பணி உட்பட பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் மொத்தம் ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்;ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அனைத்துப்பணிகளையும் தரமாகவும், விரைவாகவும், குறிப்பிட்ட கால அளவிற்குள் விரைந்து முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, பரமத்தி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.சேகர், வே.சாந்தா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகஜோதி, ஒன்றியப்பொறியாளர் ஆர்.சுப்ரமணி, உதவிப்பொறியாளர் ஆர்.கலாநிதி, பணி மேற்பார்வையாளர்கள்; ஆர்.மங்கையற்கரசி, உமாதேவி உட்பட வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்