முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம்:பாராளுமன்ற உறுப்பினர் கே.அசோக்குமார் தலைமையில் நடந்தது

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2016      கிருஷ்ணகிரி
Image Unavailable

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் குழுத் தலைவர் மற்றும் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கே.அசோக்குமார் தலைமையிலும், கலெக்டர் சி.கதிரவன் , பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக மறைந்த தமிழக முதலமைச்சர் டிசம்பர் 05 - ம் தேதி அன்று இயற்கை எய்தியதையொட்டி அவரது ஆத்மா சாந்தியடைய அனைத்து துறை அலுவலர்களுடன் 2 -நிமிடம் மௌனம் அனுசரிக்கப்பட்டது.கண்காணிப்புக் குழுத் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கே.அசோக்குமார் தெரிவித்ததாவது.மத்திய மாநில அரசுகள் இணைந்து ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் பல்வேறு வளர்ச்சி பணிகளையும், நலத்திட்டங்களையும் செய்து வருகிறது. அவற்றில் மரம் நடுதல், பண்ணை குட்டை அமைத்தல், தோட்டக்கலைத் துறைக்கு பழ மர வகைகள் வழங்குதல், தனி நபர் கழிவறை கட்டும் பணிக்கு, தனி நபருக்கு ஆடு, மாடு மற்றும் போன்றaவற்றிக்கான கொட்டகைகள் அமைத்தல், கல்வி உள்ளிட்டவை வழங்கி செயல் படுத்தி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் கால்வாய்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நீர்வரத்துள்ள பகுதிகளிலும் தடுப்பு அணைகள் கட்டுவதோடு, ஏற்கனவேயுள்ள தடுப்பு அணைகளை தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் பண்ணை குட்டைகள் அமைத்து நீர் ஆதாரங்களின் அளவை உயர்த்தும் வகையில் மத்திய மாநில அரசின் நிதியை பெற்று நடப்பாண்டிற்கு கூடுதலாக பண்ணை குட்டைகள் அமைக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒகேனக்கல் குடிநீர் விநியோகம் பள்ளிகளுக்கு வழங்கி பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு சில பள்ளிகளில் பைப்லைன்கள் பணிகள் முடிக்காதவற்றை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் கழிவறை வசதி உள்ள பள்ளிகளுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதே போல இந்திரா நினைவு குடியிருப்பு வீடுகள் மற்றும் பசுமைவீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டுவதற்கு மிகவும் ஏழை குடும்பங்களை சேர்ந்த பயனாளிகளை தேர்வு செய்து கட்டித்தர வேண்டும். மாவட்டத்தில் உள்ள கிராமபுறம் மற்றும் நகர்புறங்களில் மின் விளக்குகளின் பழுதுகளை சரிசெய்யவும், மின் விளக்குகள் அமைக்கவும் வேண்டும். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொது சுகாதார கழிப்பிடங்கள் முறையாக பயன்பாடில்லாமல்; உள்ளது. அவற்றை புதுவாழ்வு திட்டம், மகளிர் குழுக்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வட்டார வளர்;சி அலுவலர்களுக்கு கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர்கே.அசோக்குமார் வலியுறுத்தினார்.இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சூ.கிருஷ்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நரசிம்மன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்