முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையொட்டி மாநில அளவிலான கோ-ஆப்-டெக்ஸ் சிறப்பு கைத்தறி கண்காட்சி நடைபெறுகிறது:கலெக்டர் வா.சம்பத், தகவல்

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2016      சேலம்

 

சேலம்:தமிழக அரசின் கைத்தறித்துறை சார்பில், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநில அளவிலான கோ-ஆப்-டெக்ஸ் சிறப்பு கைத்தறி கண்காட்சி சேலத்தில் நடைபெறவுள்ளது. இது குறித்து கலெக்டர் வா.சம்பத், தெரிவித்ததாவது:பொங்கள் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் கைத்தறித்துறை, இந்திய அரசு ஜவுளித் துறை கைத்தறி வளர்ச்சி ஆணையம் ஆகியவை இணைந்து நடத்தும் மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி சேலம் அம்மாப்பேட்டை செங்குந்த முதலியார் திருமண மண்டபத்தில் 30.12.2016 முதல் 12.01.2017 வரை 14 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறவுள்ளது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணிவரை கண்காட்சி நடைபெற உள்ளது.இக்கண்காட்சியில் ஈரோடு, திருச்செங்கோடு, கோவை, மதுரை பரமகுடி, திண்டுக்கல், காஞ்சிபுரம், கடலூர், நாகர்கோவில் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் கலந்து கொண்டு கைத்தறி ஜவுளிகளை விற்பனை செய்து சிறப்பிக்க உள்ளார்கள். இக்கண்காட்சியில் பருத்தி சேலைகள், பட்டு சேலைகள், பட்டு வேட்டிகள், பருத்தி வேட்டிகள், மெத்தை விரிப்புகள், போர்வைகள் துண்டுகள் மற்றும் ஜமுக்காளம் ரகங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான துணி ரகங்கள் அரசு 30 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை மேற்கொள்ளப்படவுள்ளது.மேலும், பொங்கல் பாண்டிகையை முன்னிட்டு ரூ.50 இலட்சம் மதிப்பிலான ஜவுளி விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோ-ஆப்-டெக்ஸ் சிறப்பு கைத்தறி கண்காண்காட்சியில் குறைந்த விலையில் தரமான ஜவுளி ரகங்களை வாங்கி இக் கோ-ஆப்-டெக்ஸ் சிறப்பு கைத்தறி கண்காண்காட்சிக்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவிக்கவேண்டும் என கலெக்டர் வா.சம்பத், தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்