முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுபான்மையினருக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது கலெக்டர் கு.கோவிந்தராஜ் தகவல்

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2016      கரூர்
Image Unavailable

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நிகழ்ச்சியானது மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், தலைமையில் நடைபெற்றது.

 

முன்னோடி திட்டம்

 

 

தமிழக முதல்வர் சிறுபான்மையினர் கல்வியில் வளர்ச்சி அடையவும், பொருளாதார மேம்பாடு காணவும், சமூக நிலையில் உயர்வடையவும் பல்வேறு சிறப்பான முன்னோடி திட்டங்களை வகுத்து அவற்றை செயல்படுத்தி வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர்18ம் தேதி உலக முழுவதும் சிறுபான்மையினர் உரிமைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தின் நோக்கமே பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மையினர் கல்வியிலும், பொருளாதாரத்திலும் ஏற்றம்பெறுவதே ஆகும். மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மையினரின் குழந்தைகளும் கல்வி தரத்தில் சிறந்து விளங்கிட அவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2015-16ம் ஆண்டில் 6-ம் வகுப்பிலிருந்து 10-ம் வகுப்பு வரை பயிலும் 5601 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும், 11-ம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் 583 மாணவ, மாணவியர்களுக்கும் என மொத்தம் 6184 மாணவ,மாணவியர்களுக்கு சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று 2016-17ம் கல்வியாண்டில் 7570 சிறுபான்மையினர் மாணவ,மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்துள்ளனர். மேலும் 2015-16ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற 11 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.32,000 மதிப்பிலான பரிசுத்தொகை காசோலைகளாக வழங்கப்பட்டுள்ளது. மாநில அளவிலும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 12 பயனாளிகளுக்கு தலா ரூ.4,900 வீதம் ரூ.58,000 மதிப்பில் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மூலமாக பொருளாதாரத்தில் பின்தங்கிய இஸ்லாமிய பெண்களுக்கு மறுவாழ்வு நிதியுதவி திட்டத்தின் கீழ் திருமண உதவி , விதவைகள் நிதியுதவி தொகை, கல்வி உதவித்தொகை, தொழில் துவங்க கடனுதவி, கண்கண்ணாடி, ஈமச்சடங்கு உதவித்தொகை மற்றும் இயற்கை மரண உதவித்தொகை 97 பயனாளிகளுக்கு ரூ.1,44,250 மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின்(டாம்கோ) மூலம் சுய உதவிக்குழுக்களுக்கான சிறு கடன் ரூ.13.75 இலட்சம் மதிப்பில் 55 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழக அரசானது சிறுபான்மையினருக்கென பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசின் இத்திட்டங்கள் அனைத்தையும் சிறுபான்மையினராகிய நீங்கள் பயன்படுத்தி கல்வியிலும் பொருளாதாரத்திலும் வளர்ச்சி அடைய வேண்டுமென மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகா~;, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கோமகன், சமூக பாதுகாப்புத்திட்ட அலுவலர் ஜான்சிராணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பாண்டியன் (பொ) மற்றும் இஸ்லாமிய மகளிர் உதவும் சங்க கௌரவ செயலாளர் சாகுல் ஹமீது, கிறிஸ்தவ அமைப்பின் பிரதிநிதி ஜோசப் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago