முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை, திருச்சி, திண்டுக்கல் சாலையை இணைக்கும் வகையில் ரூ.47 கோடி செலவில் மேம்பால கட்டுமானப் பணிகள் : கலெக்டர் கே.எஸ்.பழனிச்சாமி செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2016      திருச்சி
Image Unavailable

சென்னை, திருச்சி, திண்டுக்கல் சாலையை இணைக்கும் வகையில் ரூ.47 கோடி செலவில் திருவாணைக்காவல் மேம்பால கட்டுமானப் பணிகள் அமைக்கும் பணி, காவேரி இடதுகரை சாலையில் ரூ.39 கோடி செலவில் அமைக்கப்பட்டிருக்கும் தார்சாலை சாலை, திருச்சிராப்பள்ளி வெளி மற்றும் உள்பந்தய சாலை ரூ.60 இலட்சம் செலவில் அமைக்கும் பணி மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. தலைமையில் செய்தியாளர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.

 

சுற்றுப்பயணம்

செய்தியாளர் சுற்றுப் பயணத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:

தமிழக அரசின் சார்பில் திருச்சிராப்பள்ளி மக்களின் போக்குவரதத்து நெரிலை பூர்த்தி செய்யும் வகையில் சென்னை, திருச்சி, திண்டுக்கல் சாலையில் (தற்போது மாநில நெடுஞ்சாலையில்) உள்ள குறுகிய திருவாணைக்காவல் ரயில்வே மேம்பாலத்திற்கு மாற்றாக நான்கு வழித்தட புதிய மேம்பாலம் கட்ட முன்னால் தமிழக முதலமைச்சர் அவர்களால் உத்தரவிடப்பட்டது. அதன்படி இப்பாலப்பணிகள் சென்னை, திருச்சி சாலையில் நான்கு வழித்தடமாகவும், கல்லணை மார்கத்தில் மூன்று வழித்தட இணைப்பு பாலமாகவும் அமைக்கப்பட உள்ளது.

இப்பாலப்பணி சென்னை, திருச்சி, கல்லணை ஆகிய மூன்று சாலைகளையும் இணைக்கும் சாலையாகும். இப்பாலம் கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தால் 2.10 லட்சம் மக்கள் தொகை கொண்ட திருவரங்கம், திருவானைக்காவல் மற்றும் இலால்குடி, புள்ளம்பாடி, திம்மராயசமுத்திரம், மேலூர், திருச்சிராப்பள்ளி மாநகரம் மற்றும் கரூர், குளித்தலை நகரத்துடன் இணைக்கும் சாலையாகும். தற்போது திருவாணைக்காவல் பழைய மேம்பாலம் அகற்றிவிட்டு புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பால வேலைப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இப்புதிய மேம்பாலத்தின் நீளம் 1430.284மீட்டரும் 17.20 அகலமும், பாலப்பகுதியில் மட்டும் கட்டுமான பணிகள் 907.76மீட்டரும், பாலத்தின் ஓடுதள அகலம் 7.50மீட்டரும் (நான்கு வழிச் சாலை). இப்புதிய மேம்பாலத்திற்கு 48 தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பாலத்தின் மீதம் உள்ள பணிகள் 2017 டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக அரசின் சார்பில் ஓருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ்; (2014-2015) ரூ.39.50 கோடி (முப்பத்து ஒன்பது கோடியே ஐம்பது இலட்சம்) மதிப்பில் சென்னை பைபாஸ் சாலையில் இருந்து கல்லணை செல்லும் வழியில் காவேரி இடதுகரை சாலையில் இடைவழித்தடத்திலிருந்து வழிதடமாக அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட சாலை போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது.

 

திருவையாறு

தமிழக அரசின் சார்பில் சுற்றுலா மேம்பாட்டிற்க்காக கடந்த 2014ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு சாலைகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. இச்சாலையினால் சுற்றுலாப் பயணிகள் கல்லணை, திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, பூம்புகார், போன்ற நகர்களுக்கு செல்ல நல்ல வழித்தடமாகும். மேலும் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை இணைக்கும் முக்கிய பிரதான சாலையாகும்.

மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் 229.300 கீ.மீ சாலைகள் 140 கோடி செலவிலும் அகலப்படுத்தப்பட்டுள்ளன. 1386.775கீ.மீ நீள சாலைகள் 331 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளன. என மொத்தம் 1616 கீ.மீ நீள சாலைகள் 471 கோடி செலவில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அதேபோல் 32 ஆற்று பாலங்களும் 3 ரயில்வே மேம்பாலங்களும் 275 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

இச்செய்தியாளர் பயணத்தின் போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர்கள் டாக்டர்.ஆர்.கிருஷ்ணசாமி, சி.என்.நாகராஜன் (திட்டம்), உதவிப்பொறியாளர்கள் கே.பெரியன்ணன், எம்.செந்தில்குமார், சமயசக்தி, ரங்கவேல், நர்மதா உட்பட பலர் உடன் இருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்