ஈரோட்டில் 30ம் தேதி வேளாண் குறைதீர் கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2016      ஈரோடு

 

ஈரோடு மாவட்டத்தில் டிசம்பர் மாதத்திற்கான வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 30ம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. காலை 11 மணி முதல் 11.30 மணி வரை மனுக்கள் கொடுக்கலாம். 11.30 மணி முதல் 12.30 மணி வரை விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பான தங்களது பகுதி பிரச்னைகள் குறித்து கருத்துகள் தெரிவிக்கலாம். பிற்பகல் 12.30 மணி முதல் 1.30 மணி முடிய அலுவலர்களின் விளக்கங்களும் தெரிவிக்கப்படவுள்ளது. இந்த கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயன் பெற கலெக்டர் பிரபாகர் கேட்டுக் கொண்டுள்ளார்

 

இதை ஷேர் செய்திடுங்கள்: