முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கான இடையேயான ஹாக்கி போட்டி காரைக்குடியில் துவங்கியது

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2016      சிவகங்கை
Image Unavailable

காரைக்குடி : இந்தியபல்கலைக்கழக கூட்டமைப்புசார்பாக தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஹாக்கி விளையாட்டுப் போட்டி காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழகத்தில் 27.12.2016 முதல் 31.12.2016 வரை நடைபெறுகிறது.  இதன் துவக்கவிழா நேற்று (27.12.2016) அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் கல்லூh pவளாகத்திலுள்ள ஹாக்க pவிளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதன் துவக்க விழாவில்,அழகப்பாபல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ.சுப்பையா தலைமையேற்று உரையாற்றுகையில், 2016 ஜனவரியில் அழகப்பாபல்கலைக்கழகத்தில் தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கைப்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.  தற்பொழுது தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஹாக்கி விளையாட்டுப் போட்டி இன்று நடைபெறுகிறது என்றும், இந்தப் போட்டியில் தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா,ஆந்திரா,தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திலிருந்து 61 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 94 அணிகள் பங்கேற்க உள்ளன.  இவற்றில் 59 ஆண்கள் அணியினரும், 35 பெண்கள் அணியினரும் அடங்குவர். இன்றுவரை 1092 விளையாட்டு வீரர்கள் விளையாடவந்துள்ளனர். 

அவர் மேலும் பேசுகையில், இளைஞர்களாகிய உங்களுக்குதிறமையும், மிகுந்த உடல் வலிமையும் இருக்கிறது.  அவற்றை முறையாக பயன்படுத்தி, ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற்று தங்கப் பதக்கம் பெறவேண்டும் என்ற எண்ணத்தோடு விளையாடவேண்டும்.  இங்குநீங்கள் கூடியிருப்பது விளையாடுவதற்காக இருந்தபோதிலும், அதன் மூலம் பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை தெரிந்துகொள்கிறீர்கள்.  அழகப்பாபல்கலைக்கழகம் தென் மண்டல ஹாக்கிவிளையாட்டுப் போட்டியை நடத்துவதில் பெருமையடைகிறது.  ஏனென்றால், ஹாக்கி நமதுதேசிய விளையாட்டாகும். ஹாக்கி மற்றும் கிரிக்கெட்டில் இந்தியா ஜீனியர் உலககோப்பையை வென்றது நாம் அனைவரும் பெருமைபடத்தக்கதாகும் என்றார்.

அழகப்பாபல்கலைக்கழகம் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துவதில் எப்பொழுதும் முன்னிலைவகிக்கிறது.  பாராவிளையாட்டு போட்டிகளில் அழகப்பாபல்கலைக்கழக வீரர்கள் பங்கேற்று மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்றுபதக்கங்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது. விளையாட்டில் வெற்றி தோல்வி என்பதுமுக்கியமல்ல,போட்டிகளில் பங்கேற்று தோல்விஅடைந்தாலும் அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை என்றும், அதில் கிடைக்கும் அனுபவங்களிலிருந்து அவற்றை பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ளவேண்டும் என்றார்.

தமிழ்நாடு ஹாக்க விளையாட்டு பிரிவின் தலைவர் திரு. எ. செல்லதுரை அப்துல்லா வாழ்த்துரை வழங்கினார். அவர் தமது உரையில், தென் மண்டலங்களுக்கான இந்தப் போட்டி மிகமுக்கியம் வாய்ந்தது என்றும் ,அவற்றை அழகப்பாபல்கலைக்கழகம் நடத்துவது பெருமைக்குரியது என்றும் கூறினார்.  விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடிதங்கப் பதக்கங்களை பெறவேண்டு மெனவிளையாட்டு வீரர்களை கேட்டுக் கொண்டார்.

இப்போட்டிகளின் பார்வையாளரும், உஸ்மானியா பல்கலைக்கழகபேராசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநருமானபேரா. வி. சத்யநாராயணா, தமது முக்கிய உரையில், நமது தேசிய விளையாட்டான ஹாக்கி உலக அளவில் பிரசித்தி பெற்ற விளையாட்டாகும். ஹாக்கி விளையாட்டில் வெற்றிபெற விளையாட்டு வீரர்களுக்கு அதிவேகமும், சக்தியும் மிகவும் அவசியமென்று கூறினார். தினமும் உடற்பயிற்சி மற்றும் யோகாமேற்கொள்பவர்கள் சிறந்த உடல் ஆரோக்கியத்தை பெறுவதுடன், அவர்கள் மருத்துவமனைகளுக்கு செல்லவேண்டிய அவசியம் ஏற்படாதுஎன்றார். 

அழகப்பாபல்கலைக்கழக கல்வியியல் புலமுதன்மையர் முனைவர் பி. சிவகுமார் வாழ்த்துரை வழங்கினார். அழகப்பாபல்கலைக்கழகப் பதிவாளர் (பொ.) முனைவர் வி. பாலச்சந்திரன் வரவேற்புரையாற்றினார். பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் முனைவர் ஆர். செந்தில் குமரன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago