குடும்ப அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணிகள் வழங்கல் அலுவலர் மனோகரன் ஆய்வு

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      விழுப்புரம்
27K1FOTO

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி நகரில் உள்ள பலவேறு வார்டுகளில் குடும்ப அட்டையுடன் ஆதார் எண், அலைபேசி எண் இணைக்கப்பட்டுள்ளதா என்று மாவட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆதார் எண் இணைக்கும் பணி

மாவட்ட வழங்கல் அலுவலர் மனோகரன் கள்ளக்குறிச்சி நகரில் கச்சிராயப்பாளையம்சாலை வ.உ.சி நகர், கோட்டைமேடு, கருனாபுரம் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு வீடு வீடாகச் சென்று குடும்ப அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்ட்டுள்ளதா, அலைபேசிஎண் இணைக்கப்பட்டுள்ளதா, உயிரிழந்தவரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதா, வீட்டிள் உள்ளவர் திருமணமாகி அவர் குடும்பஅட்டை தனியே பெற்றிருந்தால் அவரின் பெயர் நீக்கப்பட்டுள்ளதா, குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களின் ஆதார் எண்கள் சரியாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர் ஜோதிவேல், வருவாய் ஆய்வாளர் ரமேஷ், மாவட்ட கணினி மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி, நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள், சத்துனவு அமைப்பாளர்கள் உள்ளி்ட்ட பலரும் உடன் இருந்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: