ஜெயலலிதா மறைவு:தியாகதுருகத்தில் நினைவஞ்சலி பேரணி

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      விழுப்புரம்
27k2foto

கள்ளக்குறிச்சி

தியாகதுருகத்தில் அம்மா நினைவு அஞ்சலி பேரணிக்கு ஒன்றிய செயலாளர் வெ.அய்யப்பா தலைமை வகித்தார். நகர செயலாளர் ஷியாம் சுந்தர், முன்னாள் எம்.எல்.ஏ கோமுகி.மணியன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்பாஷா முன்னிலை வகித்தனர்.

பேரணியில் காமராஜ் எம்.பி, பிரபு எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் மோகன் உள்ளிட்ட கட்சித் தொண்டர்கள் பலரும் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர். பேரணியை கட்சி அலுவலகத்திலிருந்து துவங்கினர். பேரணியில் அம்மா படத்த்தினை கையில் ஏந்திவாறு கடைவீதி வழியாக ஊர்வலமாக பேருந்து நிலையம் சென்றடைந்தனர்.

அங்கு அவரது  படத்தினை வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர். பேரணியில் கட்சித் தொண்டர்கள் பலரும் பங்கேற்றனர். பின்னர் பேருந்து நிலையம் அருகே அன்னதானம் வழங்கப்பட்டது.

ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், ராஜேந்திரன், மீனவரணி செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய துணை செயலாளர் ராஜவேலு, ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர அவைத் தலைவர் அய்யம்பெருமாள், நகர துணை செயலாளர் சீனுநரசிம்மன் உள்ளிட்ட கட்சித் தொண்டர்கள் பலரும் பங்கேற்றனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: