முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செஞ்சி அரசு மகளிர் பள்ளியில் ரூ 1.76 கோடி மதிப்பில் 10 வகுப்பறை கட்டடங்கள்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      கடலூர்

செஞ்சி,

 

செஞ்சி அரசு பெண்கள் மேல்நி்லைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு கோடியே எழுபத்தாறு லட்சத்து பதினெட்டாயிரம் மதிப்பில் 10 வகுப்பறை கட்டடம் மற்றும் ஆய்வகம் உள்ளிட்ட கழிவரை, குடி நீர் வசதிகள் அடங்கிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

 

இப் பணிகளை விழுப்புரம் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது பணிகளை தரமாகவும், விரைந்து பணிகளை முடித்து தருமாறு கேட்டுக்கொண்டார். பள்ளி தலைமை ஆசிரியர் திலகவதி, பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பாஸ்கரன் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக செஞ்சி, வல்லம் ஒன்றியங்களில் உள்ள அரசு உயர்நிலை, மேல் நிலைப்பள்ளிகளில் இருந்து வருகை தந்த 30 மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு நடைபெற்ற சிறப்பு வகுப்புகளை பார்வையிட்டார். மேலும் 100 சதவீதம் தேர்ச்சி பெற நன்றாக படிக்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்