முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாசரேத், அருகே காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: பாதிரியாருக்கு 14ஆண்டு சிறை தண்டனை - நீதிமன்றம் உத்தரவு

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      தூத்துக்குடி

தூத்துக்குடி.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத், அருகே காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியாருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத், அருகே மூக்குப்பீறியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ஜோசப், (வயது.57). கிறிஸ்தவ பாதிரியாரான இவர், அப்பகுதியில், “லிட்டில் ஏஞ்சல்” என்ற பெயரில் சிறுவர் காப்பகம் நடத்தினார். அங்கு ஏழைக் குழந்தைகள், சிறைக் கைதிகளின் குழந்தைகள் தங்கி, அருகிலுள்ள பள்ளிகளில் படித்து வந்தனர். அப்போது நிர்வாகி ஸ்டீபன் ஜோசப், சிறுமிகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். ஆனால், சிறுமிகள் பயந்துகொண்டு, அதனை பெற்றோரிடம் சொல்லாமல் தவிர்த்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 19.01.2012 அன்று காப்பக நிர்வாகியின் பாலியல் அத்துமீறல் குறித்து மாணவியின் தந்தை ஒருவர் நாசரேத் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் காப்பக நிர்வாகி, மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து ஸ்டீபன் ஜோசப்பை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி 2வது அமர்வு கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் காதர் இன்று தீர்ப்பு கூறினார். அதில், ஸ்டீபன் ஜோசப்புக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ரூ.8லட்சம் இழப்பீடும் வழங்க வேண்டும் என அவர் உத்தரவு பிறப்பித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்