பொன்னேரி வட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      திருவள்ளூர்
P neri

திருவள்ளுர் மாவட்டம்,பொன்னேரி வட்டத்தில் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பழவேற்காடு மீன்பிடி பகுதியினையும்,ஆலாடு விவசாயப் பகுதியினையும் மத்திய குழுவைச் சேர்ந்த மத்திய வேளாண்துறை இயக்குனர் [பொறுப்பு] கே.மனோகரன்,சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் சென்னை மண்டல அதிகாரி அரவிந்த்,மத்திய ஊரக வளர்ச்சித்துறை சார்பு செயலாளர் திவாரி,மத்திய நீர் ஆணையத்தின் காவிரி மற்றும் தென் மண்டல ஆறுகள் இயக்குனர் [கண்காணிப்பு] ஆர்.அழகேசன் ஆகியோர் பார்வையிட்டனர்.உடன் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாம்சன்,பொன்னேரி சாராட்சியர் தண்டபாணி,வட்டாட்சியர் செந்தில்நாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் இருந்தனர்.

 

பழவேற்காடு கடலோரப்பகுதியில் வர்த்தா புயலால் படகுகள் சேதம் அடைந்ததையும்,மின் கம்பங்கள் சாய்ந்ததையும்,சாலைகள் துண்டிக்கப்பட்டதையும் மாவட்ட ஆட்சியர் மத்திய குழுவினருக்கு விளக்கிக்காட்டினார்.தற்போது போர்கால அடிப்படையில் பணிகள் நடைப்பெற்று வருவதையும் விளக்கினார்.மேலும் ஆலாடு ஊராட்சியில் புயலால் பயிர் நிலங்கள் பாதிக்கப்பட்டதையும்,சேதத்தையும் மத்தியக் குழுவினர் பார்வையிட்டனர்.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: