முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலனா விளையாட்டுப்போட்டிகள் கல்வி அமைச்சர் துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      திருச்சி
Image Unavailable

பள்ளிக்கல்வித்துறை சார்பில் 34 வது மாநில அளவிலான பாரதியார் தின குழு விளையாட்டுப்போட்டிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் துவக்கிவைத்தார்.

 

வுpழாவிற்கு திருச்சி மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி தலைமை வகித்தார். மாநில பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் வரவேற்றார்.முசிறி எம்.எல்.ஏ செல்வராஜ்,கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் பொருளாளர் தென்னரசு,இணைச்செயலாளர் அசோக்குமார்,பள்ளிக்கல்வி இணைஇயக்குனர்(நாட்டுநலப்பணித்திட்டம்) பொன்னையா,கல்லூரி முதல்வர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

விழாவில் பள்ளிக்கல்வி,விளையாட்டு மற்றும் இளைஞர்நலத்துறை அமைச்சர் பாண்டியராஜன் போட்டிகளை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

 

அப்போது அவர் பேசியதாவது. ஓடிவிளையாடு பாப்பா என்ற கூறியவர் பாரதியார்.எனவே அவரது பெயராலே மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.விளையாட்டுத்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் முதல்வர் ஜெயலலிதா.இந்த பாரதியார் தின விளையாட்டுப்போட்டிகளில் 26 விளையாட்டுகள் உள்ளன.இதற்காக அரசு 10 கோடி ஒதுக்கி தந்துள்ளது.இந்த போட்டிகள் 12மண்டலங்களில் நடத்தப்படுகிறது.தமிழகத்தில் விளையாட்டிற்காக 750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.விளையாட்டில் திறமையை உணர்ந்து செயல்பட்டால் சாதிக்கலாம்.விளையாட்டில் தமிழகம்12வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறிஉள்ளது.இதை முதலிடத்திற்குகொண்டு வர தமிழக அரசு முனைப்புடன் செயல்படுகிறது. தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக்போட்டியில் 6பேரை தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்பட்டு கலந்து கொண்டனர்.இப்போது 24 பேர் தேர்வு செய்யப்பட்டுபயிற்சி அளிக்கப்பட்டு ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.சீர்மிகு விளையாட்டுவீரர்களுக்கு ரூ 25 லட்சம் வழங்கப்படுகிறது.இளம் வீரர்கள் ஆறாம் வகுப்பு முதல் கண்டறியப்பட்டு அவர்களுக்கு 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் வாழ்க்கை கல்வியாககொண்டு செயல்படவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.முடிவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாந்தி நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago