முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

த.மா.கா தலைவர் ஜிகே.வாசன் பிறந்த நாள் திருவெள்ளரையில் ஆதரவற்றோருக்கு அன்னதானம்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      திருச்சி
Image Unavailable

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சியினர் மண்ணச்சநல்லூரில் ஆதரவற்றோருக்கு அன்னதானம், கோயில்களில் மாவட்ட தலைவர் கேவிஜி. இரவீந்தரன் தலைமையில் சிறப்பு அபிசேகம் செய்து கொண்டாடினர்.

 

திருப்பட்டுர் பிரம்மா கோயில், திருப்பைஞ்சிலி நீலவனேஸ்வரர் கோயில், திருவெள்ளரை பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு அபிசேக செய்தனர். மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு பிரட், பிஸ்கட் வழங்கினர். மாலையில் திருவெள்ளரையில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு உணவு வழங்கினர். நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.தர்மராஜ், மாவட்ட துணைத்தலைவர் தங்கராஜ், மாவட்ட துணை செயலாளர் மருதநாயகம், நகர தலைவர் சிவராமன், வட்டார தலைவர்கள் ராமச்சந்திரன், கந்தசாமி, வட்டார துணை தலைவர் ஜெயக்குமார், இளைஞரணி வட்டார தலைவர்கள் பைந்தமிழ்ராஜா, ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்