அரியலூர் மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோருக்கு இலவச கண்சிகிச்சை முகாம் நாளை நடக்கிறது

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      அரியலூர்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் மற்றும் இதர ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகளில் 80 வயதுக்கு மேறப்பட்டோர், இதர முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகள் மற்றும் பொதுமக்களும் பயன்பெறும் நோக்கத்தோடு 29.12.2016-ம் தேதியன்று ஜெயங்கொண்டம் வட்ட அலுவலகத்தில் காலை 09.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை இலவச கண்சிகிக்சை அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு அரசு மருத்துவர்களால் கண்புரை அறுவை சிகிச்சைகளும் இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்வரிய வாய்ப்பினை அனைத்து முதியோர் உதவித்தொகை பெறுபவர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: