தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் : கலெக்டர் ஆ.அண்ணாதுரை செய்தியாளர்களுடன் சென்றுஆய்வு

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      தஞ்சாவூர்
pro thanjai

தஞ்சாவூர் ஒன்றியம், குருங்குளம் கிழக்கு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

செய்தியாளர் பயணம்

 

செய்தியாளர் சுற்றுப்பயணத்தில் செய்தியாளர்களிடம் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, தஞ்சாவூர் மாவட்டம், குருங்குளம் கிழக்கு ஊராட்சியில் ஊரக வளர்ச்சி முகமை மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 7 ஏக்கரில் 2013-2014 நிதியாண்டில் பசுமை மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் கீழ் ரூ.1.34 இலட்சம் மதிப்பீட்டில் 3.5 ஏக்கர் பரப்பளவில் பழம் தரும் மர வகைகளான மாகன்று 200, சப்போட்டா 167, கொய்யா 27, பழ 28, புளிய மரம் 80, நெல்லி 4, மூங்கில் 80, தேக்கு 300, என ஆக மொத்தம் 886 2015-16 நிதியாண்டில் 6 இலட்சம் மதிப்பீட்டில் 3.5 ஏக்கர் பரப்பளவில் வேங்கை, கோங்கு, செம்மரம், கருமருது, பிள்ளைமருது போன்ற 2000க்கு மேற்பட்ட மர வகைகளும், ஆழ் குழாய் கிணறும் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. 30 தேனீ கூண்டுகள் அமைக்கப்பட்டு பழ வகைகளுக்கு தேவையான மகரந்த சேர்க்கைக்கும் தேன் சேகரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் கிராமப்புறத்தில் பசுமை பெருவதன் மூலம் சுற்றுப்புற சூழலும் பாதுகாக்கப்படுகின்றது.

தஞ்சாவூர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமையில் மூலம் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகளில் 7014 பயனாளிகளுக்கு புதிய கான்கிரீட் வீடுகள் ரூ.99.88 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. தாய் திட்டத்தில் குறைந்தபட்ச அடிப்படை தேவைப்பணிகள் 1525 எண்ணிக்கையில் ரூ.34.28 கோடிக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 119 பணிகள் ரூ.37.50 கோடி மதிப்பீட்டில் கிராமப்புறங்களில் உள்ள மண் சாலைகள் அல்லது பழுதடைந்த சாலைகள் பிரதான சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிகள் உட்கட்டமைப்பு திட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க ஃ நடுநிலைப்பள்ளிகளில் புதிய வகுப்பறை கட்டிடம், சத்துணவு கூடம், குடிநீர் வசதி, சுற்றுச் சுவர் மற்றும் கழிவறை வசதிகள் செய்தல் போன்ற 478 பணிகள் ரூ.6.03 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஊரக பகுதிகளில் மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்திட 1,17,302 எண்ணிக்கையிலான பணிகள் ரூ.140.76கோடி மதிப்பீட்டில் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டப்பட்டு, பொது சுகாதாரத்தை பாதுகாத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் 486 பணிகள் ரூ.19.78 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் திட்ட நிதியிலிருந்து 204 பணிகள் ரூ.12.47 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் கிராம ஊராட்சிகளில் பொது மக்கள் பயன்பாட்டிற்கும், ஊரக பகுதி இளைஞர்களின் உடல் திறன் மேம்பாட்டிற்கும், அம்மா பூங்காக்கள் மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடங்கள் 15 எண்ணிக்கையில் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளது. தமிழ்நாடு குக்கிராமங்கள் மேம்பாடு திட்டம் இரண்டின் கீழ் கிராம புறங்களின் நீர் ஆதாரத்தினை மேம்படுத்திடவும், நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்திடவும், சிறு பாசன ஏரிகள் மேம்பாடு செய்தல், கிராமப்புற சாலைகள் மேம்பாடுஃ வலுப்படுத்துல்ஃ புதுப்பித்தல் செய்தல் மற்றும் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளாகிய குடிநீர் வசதி, தெரு விளக்கு, பொது மக்கள் வசிப்பிட தெருக்கள் மற்றும் சந்துகள் மேம்பாடு ஆகிய பணிகள் ரூ.25.17 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளது என மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரை, சாமிநாதன், ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளர் ராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.சிங்காரம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் போ.சுருளிபிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: