ஊட்டியில் உலக குழந்தைகள் தினம் கொண்டாட்டம்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      நீலகிரி
28ooty-2

 

ஊட்டியில் உலக குழந்தைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

 

டிசம்பர்_ 28

 

உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க ஆலயங்களில் ஆண்டுதோறும் டிசம்பர் 28_ந் தேதி உலக குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. வழக்கமாக கிறிஸ்துமஸ் நாளன்று தொடங்கி ஜனவரி 6_ந் தேதி வரை 12 நாட்கள் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. அதில் ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு தினமாக கொண்டாடப்படும். அதில் கிறிஸ்துமஸ் நான்காம் நாள உலக குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

 

சிறப்பு திருப்பலி

 

அதனையொட்டி ஊட்டி செயின்ட் மேரீஸ் ஆலயத்தில் பங்கு தந்தை வின்சென்ட் தலைமை தாங்கி சிறப்பு திருப்பலியை நடத்தி பேசுகையில்,

 

உலகம் முழுவதும் இன்று ஆலயங்களில் குழந்தைகளை தினம் கொண்டாடப்படுகிறது. ஏசு பிறந்த பொழுது ஆண் குழந்தைகளை கொலை செய்தான் அரசன் ஏரோது. குழந்தை ஏசுவை காப்பாற்ற அந்த மாசற்ற குழந்தைகள் தங்கள் உயிரை கொடுத்து வேத சாட்சிகளாக இன்று திகழ்கின்றனர்ய அவர்களின் நினைவாக குழந்தைகள் தினம் அனுசரித்து குழந்தைகளுக்கு ஆசீர் வழங்கப்படுகிறது. எனவே பெரியோர்கள் குழந்தைகள் போல் மாசற்று மாற வேண்டும். அப்பொழுதுதான் விண்ணகத்தில் நுழைய முடியம் என்றார்.

 

பரிசு, இனிப்பு

இந்நிகழ்ச்சியில் பங்கில் உள்ள கை குழந்தை முதல் அனைத்து குழந்தைகளும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பரிசுகளும், இனிப்புகளும் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை மறை கல்வி ஆசிரியர்கள், செயலர் ஒலிவியர் மற்றும் வின்சென்ட் மனோகர் செய்திருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: