ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாமில் 200 பயனாளிகளுக்கு ரூ.1.05 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் : கலெக்டர் கு.கோவிந்தராஜ், வழங்கினார்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      கரூர்

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், அப்பிபாளையம் ஊராட்சி கேத்தம்பட்டியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிறைவு விழா மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், தலைமையில் நேற்று (28.12.2016) நடைபெற்றது.

 

விளக்கம்

 

இம்முகாமில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, வேளாண்மைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை வாயிலாக சிறு கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து துறை அலுவலர்களால் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

வருவாய்த்துறை சார்பில் முதியோர் உதவித்தொகை, விலையில்லா வீட்டுமனைப்பட்டா, நத்தம் பட்டா நகல், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, குடும் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் மாற்றம், ஆண்வாரிசு இல்லை எனச்சான்று, இறப்புப்பதிவு – தடையின்மை சான்று, வாரிசு சான்று, இயற்கை மரண உதவித்தொகை, விபத்து மரண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை ஆகியவை 176 பயனாளிகளுக்கும், வேளாண்மைத்துறை சார்பில் மரக்கன்று, நுண்ணூட்டச்சத்து ஆகியவை 5 பயனாளிகளுக்கும், தோட்டக்கலைத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கும், புதுவாழ்வு திட்டத்தின் சார்பில் 12 பயனாளிகளுக்கும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கும் ரூ.1,04,72,600 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இம்முகாமில் மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களைப் பெற்றுக் கொண்டு பேசுகையில்

 

ஏழை, எளிய மக்களின் பசி தீர்ப்பதற்காக அரசால் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது. ஏழை மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கம் மற்றும் நிதியுதவியையும் அரசு வழங்கி வருகிறது. பொதுமக்கள் நோய் நொடியின்றி சுகாதாரமாக வாழ்வதற்காக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உழவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக உழவர் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வாரம் ஒவ்வொரு கிராமமாக தேர்வு செய்து அம்மா திட்ட முகாம், டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் சுகாதாரத்துறையின் மூலம் பிரசவித்த தாய்மார்களுக்கு 12,000- உதவித்தொகை வழங்கப்படுகிறது.

 

கல்வி செல்வம்

 

மேலும், குழந்தை தொழிலாளர் முறையை அறவே ஒழித்து அவர்களுக்கு தேடித்தேடி கல்வியை அளிக்க வேண்டும். குழந்தைத்தொழிலாளர் மூலம் வரும் வருமானம் நமக்கு அவமானம் என ஒவ்வொருவரும் கருத வேண்டும். கல்வி ஒன்றே நமக்கு அழியாத செல்வம். அப்படிப்பட்ட கல்வியை நமது அரசு பள்ளி திறந்த முதல்நாளே விலையில்லா பாடநூல், விலையில்லா சீருடை உள்ளிட்ட 14 வகையான உதவிகளுடன் விலையில்லாமல் கல்வி வழங்கி வருகின்றது. இத்திட்டங்களை முறையாக பெற்று மக்கள் பயன்பெற வேண்டுமென மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் ஜான்சிராணி, வேளாண் இணை இயக்குநர் அல்தாப், சுகாதாரப்பணிகளின் துணை இயக்குநர் மரு.நளினி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில் வட்டாட்சியர் அம்பாயிரநாதன், தனி வட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்: