Idhayam Matrimony

புதுநடுவலூர் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழாவில் 95 பயனாளிகளுக்கு ரூ.1.35 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் : மாவட்ட வருவாய் அலுவலர்(பொ) மு.துரை வழங்கினார்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழா பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட புதுநடுவலூர் கிராமத்தில் நேற்று(28.12.2016) நடைபெற்றது.

 

திட்டங்கள்

 

இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறைகளின் அலுவலர்களும் தங்கள் துறைசார்ந்த திட்டங்கள் குறித்தும், இத்திட்டங்கள் மூலமாக பொதுமக்கள் பயன்பெறுவதற்குண்டான வழிமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.

அதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர்(பொ) பேசியதாவது:

இந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யாததன் காரணமாக விவசாயம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து விவசாயிகளும் பயிர்பாதுகாப்புத்திட்டத்தின கீழ் தங்கள் பெயர்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும். மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்களது குடும்ப அட்டையுடன் ஆதார் எண்களை இணைக்க வேண்டும். மேலும் வரும் ஆண்டிலிருந்து பொதுமக்கள் அனைவரும் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகளை இணையதளம் மூலமாக மேற்கொள்ளலாம். மேலும் அரசின் திட்டங்களை பெறுவதற்கு அரசு அலுவலகங்களை பொதுமக்கள் தேடிச் சென்ற காலம் போய், பொதுமக்களைத் தேடி அரசின் திட்டங்களை செயல்படுத்த வருகை தரும் அரசு அலுவலர்களிடம் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து அரசின் திட்டங்களை முறையாக பெற்று தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும். இந்த மனுநீதிநாள் முகாமில் 77 மனுக்கள் வரப்பெற்று 60 மனுக்களுக்கு உரிய பதில் அளிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 17 மனுக்கள் உரிய விசாரணைகளுக்குப் பிறகு தீர்வு காணப்படும்.

இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சியில் 37 பயனாளிகளுக்கு ரூ.56,41,480- தொகை மதிப்பிலான நத்தம் வீட்டுமனைப்பட்டாக்களும், 23 பயனாளிகளுக்கு ரூ.72,34,630- மதிப்பிலான நத்தம் பட்டாக்களும், 10 பயனாளிகளுக்கு ரூ.84,000- மதிப்பிலான திருமண உதவித் தொகையும், 12 பயனாளிகளுக்கு ரூ.1,50,000ஃ- மதிப்பிலான இயற்கைமரண உதவித் தொகையும், 3 பயனாளிகளுக்கு ரூ.2,00,000- மதிப்பிலான விபத்து காப்பீட்டுத் தொகையும், 4 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளும், வேளாண்மைத் துறை மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.1,00,350ஃ- மதிப்பிலான உதவிகளும், தோட்டக்கலைத் துறை மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.1,75,000ஃ- மதிப்பிலான உதவிகளும் என 95 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1,35,85,460- மதிப்பிலான உதவிகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.ரா.பேபி, தனித்துணை கலெக்டர்(ச.பா.தி) புஷ்பவதி, மாவட்ட பிற்ப்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மோகன், வருவாய் வட்டாட்சியர் ச.பாலகிருஷ்ணன், வட்டாட்சியர்(ச.பா.தி) இரா.பொன்னுதுரை மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்