முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோபி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் வாரியத்தேர்வில்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      ஈரோடு
Image Unavailable

 

தொடர்ந்து 18 ஆண்டுகளாக கோபி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மாண்வர்களின் கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் கோபி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மாநில அளவில் தொடர்ந்து வாரிய தேர்வில் முன்னிலை பெற்று விளங்குகிறார்கள்.

 

அக்டோபர் - 2016 ல் நடைபெற்ற பாலிடெக்னிக் வாரியத் தேர்வில் கோபி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியின் மின்னனுவியல் துறையைச் சார்ந்த மாணவர் கலையரசு 699/700 மதிப்பெண்கள் பெற்று கல்லூரியில முதல் இடத்தையும மாநில அளவில் சிறப்பிடத்தை பெற்றார்,

 

மின்னனுவியல் துறையைச் சார்ந்த மாணவி தேவயாணி 686/700 மதிப்பெண்கள் பெற்று கல்லூரியில் இரண்டாம் இடத்தையும், மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறையைச் சார்ந்த மாணவர் சதீஸ் 671/700 மதிப்பெண்கள் பெற்று கல்லூரியில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்கள்.

 

கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவி பிரவீணா 743/800 மதிப்பெண்கள் பெற்று முதலாம் ஆண்டில் முதல் இடத்தையும், சிவில் துறையைச் சார்ந்த மாணவர் அஐPத் 582/700 மதிப்பெண்கள் பெற்று துறையில் முதல் இடத்தையும், மெக்கானிக்கல் துறையைச் சார்ந்த மாணவர் தினேஸ்குமார் 665/700 மதிப்பெண்கள் பெற்று துறையில் முதல் இடத்தையும், மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறையைச் சார்ந்த மாணவர் சதீஸ் 671/700 மதிப்பெண்கள் பெற்று துறையில் முதல் இடத்தையும், மின்னனுவியல் துறையைச் சார்ந்த மாணவர் கலையரசு 699/700 மதிப்பெண்கள் பெற்று துறையில் முதல் இடத்தையும் பெற்றுள்ளனர்.

 

கோபி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியின் மெக்கானிக்கல் துறையில் 1 பாடத்தில் 1 மாணவரும், மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறையில் 1 பாடத்தில் 1 மாணவரும், மின்னனுவியல் துறையில் 3 மாணவரும் தனிப்பட்ட பாடங்களில் 75/75 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

 

தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் அனைவரையும் கல்லூரியின் தலைவர் சிராஜுதீன் மற்றும் தாளாளர் கார்த்தி அரசு ஆகியோர் வாழ்த்தி பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர். கல்லூரியின் முதல்வர் சுரேசூகுமார் மற்றும் துணை முதல்வர் மலரவன் ஆகியோர் பரிசு பெற்ற மாணவர்களையும் அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் பாராட்டினார்கள்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்