முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமீர்கானின் 'டங்கல்' 5 நாள்களில் ரூ.300 கோடி வசூல் செய்து சாதனை

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      சினிமா
Image Unavailable

மும்பை  - அமீர்கானின் 'டங்கல்' படம் 5 நாள்களில் ரூ.300 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

5000 திரையரங்குகளில்....
அமீர் கான், சாக்‌ஷி தன்வார் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - டங்கல். கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று வெளியானது.   இந்தப் படத்தைப் பார்த்த  என பலதரப்பினரும் படத்தை ஆஹோ ஓஹோவென்று புகழ்ந்து தள்ளுகிறார்கள். நாடு முழுக்க டங்கல் படத்துக்கு ஏகோபித்த பாராட்டுகள் கிடைத்துள்ளன. இந்தியாவில் 4300 திரையரங்குகளில் இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ள டங்கல், வெளிநாடுகளில் 1000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆக மொத்தம் உலகம் முழுக்க 5000-க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டு வெற்றிநடைபோட்டு வருகிறது.

5 நாளில் ரூ.300 கோடி
இந்நிலையில் இந்தியாவில் படத்தின் முதல் மூன்று நாள் வசூல் ரூ. 132.3  கோடியைத் தொட்டது. இந்நிலையில் உலகம் முழுக்க முதல் 5 நாள்களில் ரூ. 200 கோடி வசூலித்துள்ளது டங்கல். முதல் நான்கு நாள்களில் இந்தியாவில் ரூ. 132 கோடியும் வெளிநாடுகளில் ரூ. 76 கோடியும் அள்ளியுள்ளது. ஒட்டுமொத்தமாக உலகளவில் ரூ. 300 கோடிக்கு மேல் முதல் 5 நாள்களில் வசூலித்து மகத்தான சாதனை புரிந்துள்ளது.

சாதனை படைக்கும்
நேற்று முன்தினம் இந்தியாவில் மட்டும் ரூ. 150 கோடியை அள்ளியிருக்கும் டங்கல், அடுத்தச் சில நாள்களில் இந்தியாவில் மட்டும் ரூ.200 கோடியைத் தொட்டுவிடும் நிலைமையில் உள்ளது. இதன் அடிப்படையில் வரும் வாரங்களில் பல சாதனைகளை இந்தப் படம் உடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago