முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் மாவட்டம் மணலூரில் மக்கள் தொடர்பு முகாம்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      திண்டுக்கல்
Image Unavailable

 

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், பெரும்பாறை ஊராட்சி, மணலூர்

கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட ஆட்சித்;தலைவர்

டாக்டர்.டி.ஜி.வினய், தலைமையில் நடைபெற்றது. இந்த மக்கள்

தொடர்பு முகாமில் நலத்திட்;ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:-

 

 

தமிழக அரசால் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசின் திட்டங்களை மென்மேலும் பொதுமக்கள் தெரிந்து கொண்டு பயன்பெறும் வகையில், அரசை தேடி மக்கள் என்ற நிலையை மாற்றி, மக்களைதேடி அரசு என்ற நிலையில் தமிழக அரசு முனைப்புடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

 

 

தமிழக அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமணநிதி உதவித்தொகை மகப்பேறுநிதியுதவித்திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக சிறுதொழில் தொடங்க கடன் உதவி, 2 பெண் குழந்தை பாதுகாப்புதிட்டத்தின்கீழ் நிதியுதவித்தொகை என பெண்களுக்கென்று பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

 

 

மேலும் பெண்கள் இன்றைய காலகட்டத்தில் பொருளாதார அடிப்படையில் யாரையும் சார்ந்திருக்காமல் சுயமாக தன்னைத்தானே முன்னேற்றிக்கொண்டு தன்னுடைய

 

குடும்பத்தையும் முன்னேற்றம் அடைய வழிவகை செய்துள்ளது. மேலும் தமிழக அரசால் கிராமப்புரவளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. அவ்வாறு செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களை

சென்றடையும் வகையில், அனைத்துத்துறை முதன்மை அரசு அலுவலர்களை கொண்டு மாதம் ஒருமுறை கிராமப்புறங்களில் மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

 

இதுபோன்று நடத்தப்படும் மக்கள் தொடர்புமுகாமில் பொதுமக்கள் அரசின் நலத்திட்டங்களை தெரிந்து கொள்ளும் வகையில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, சமூகநலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி தி;ட்டத்தின் மூலம் அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள், ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் தமிழக அரசால் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் குறித்த திட்டங்கள் குறித்த செயல் விளக்ககண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

 

மேலும், அத்திட்டங்கள் மூலம் பொதுமக்கள் எவ்வாறு பயன்பெற முடியும் என்பது குறித்து துறைவாரியாக தொடர்புடைய முதன்மை அலுவலர்கள் விரிவாக எடுத்துரைத்தனர். இதனால் அரசின் திட்டங்களை கிராமத்தில் உள்ள பொதுமக்கள் எளிதில் அறிந்து கொண்டு பயன்பெற வாய்பாக உள்ளது.

இந்த மக்கள் தொடர்புமுகாமிற்கென பட்டா மாறுதல், வீட்டுமனைப்பட்டா,

தையல் இயந்திரம், தேய்ப்புபெட்டி, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா,

புதியகுடும்ப அட்டை, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

 

 

பொதுமக்களிடமிருந்து ஏற்கனவே பெறப்பட்ட மனுக்கள் பரிசீலனை செய்துதகுதியுடைய மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு நலத்திட்ட உதவிகள்

வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் பெறப்படும் மனுக்களையும் தொடர்புடைய

அலுவலர்களுக்கு வழங்கி, தகுதியுடைய மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை

மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த மக்கள் தொடர்பு முகாமில் பட்டாமாறுதல், இலவசவீட்டுமனைப் பட்டா நகல், பட்டா மாறுதல் உட்பிரிவு, வீட்டுமனைப்பட்டா, புதிய குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ், நலிந்தோர் நிவாரண உதவித்தொகை, இயற்கை மரண நிவாரண உதவித்தொகை, விலையில்லா தையல் இயந்திரம் என 55

 

பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.2.54 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் அரசு

நலத்திட்டங்களை பயன்படுத்தி பயனாளிகள் மென்மேலும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் வினய்; பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்