பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் டி.பி.ராஜேஷ் தொடங்கி வைத்தார்

வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2016      கடலூர்
Dec 29-a

கடலுார்,

 

பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" திட்டம் குறித்த மூன்று சக்கர வாகன (ஆட்டோ) விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் டி.பி.ராஜேஷ், கலெக்டர் முகாம் அலுவலகத்தில் பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் குறித்து அச்சிடப்பட்ட வாசகங்கள் அடங்கிய வில்லையினை மூன்று சக்கர வாகனத்தில் ஒட்டி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 

இப்பேரணி கலெக்டர் முகாம் அலுவலகத்திலிருந்து அண்ணா மேம்பாலம், கே.வி டெக்ஸ் வழியாக கடலூர் பேருந்து நிலையம் வரை சென்றது. இப்பேரணியில் பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் குறித்த ‘பெண் குழந்தையும் நம் குழந்தையே, கருச்சிதைவை ஒழிப்போம்! பெண் சிசு வதையை தவிர்ப்போம்!!, கருவில் ஆணா, பெண்ணா கண்டறிவதை தவிர்ப்போம், பெண் குழந்தைகள் பிறந்தால் குடும்பத்திற்கு லட்சுமி வந்தாச்சு, ஒரு ஆண் படித்தால் அவன் மட்டும் படிப்பாளி, பெண் படித்தால் குடும்பமே படிப்பாளி" போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் தெரிவித்து பொதுமக்களிடையே தெரிவிக்கப்பட்டன. இப்பேரணியில் 50 மூன்று சக்கர வாகனங்கள் (ஆட்டோ) கலந்து கொண்டன.

 

கலெக்டர் இப்பேரணியை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற திட்டம் கடலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாகத்தான் இன்று பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் குறித்து ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பேரணி நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும், ஒவ்வொரு மாதம் 7-ம் தேதி கலெக்டர் அவர்களின் தலைமையில் அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார மையங்களில் பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்களுக்கு சான்றிதழ், மரக்கன்றுகள் மற்றும் அம்மா பெட்டகம் ஆகியவை வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இவ்வாறு பெண் குழந்தைகள் பிறப்பை ஊக்குவித்து பெண் குழந்தைகளை நல்ல முறையில் காப்பாற்ற வேண்டும், வாழ்கையில் சிறந்து விளங்க அவர்களுக்கு நல்ல கல்வி வழங்கவேண்டும் என்பதை மையாக வைத்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.

 

இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் அன்பழகி, துணை இயக்குநர் (சுகாதாரம்) ஜவஹர், மாவட்ட சமூக நல அலுவலர் மீனா, வட்டார போக்குவரத்து அலுவலர் அங்கமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) நாகலட்சுமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: