முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயம்புத்தூர் மாநகராட்சியில் அமைப்பு சாரா குப்பை சேகரிக்கும் 100-க்கும் மேற்பட்ட ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் அடையாள அட்டைகளை வழங்கினார்

வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2016      கோவை
Image Unavailable

 

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சியும் தூய்மை பாரத இயக்கமும் இணைந்து மாநகராட்சியின் அமைப்பு சாரா குப்பை சேகரிக்கும் 100-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் அடையாள அட்டைகளை இன்று (29.12.2016) வழங்கினார்.

 

மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்களின் தெரிவிக்கையில், "கோயம்புத்தூர் வெள்ளளுர் குப்பை கிடங்கில் குப்பை சேகரிக்கும் தொழிலாளர்கள் பலர் பணியாற்றி வருகின்றார்கள். மேலும் மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளுக்கும் செல்லும் குப்பைகளை சேகரிக்கும் நபர்கள், குப்பை சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டும் வருகின்றார்கள், அவர்களின் பாதுகாப்பு கருதியும், அவர்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் முதற்கட்டமாக இன்று (29.12.2016) மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சியும் தூய்மை பாரத இயக்கமும் இணைந்து மாநகராட்சியின் அமைப்பு சாரா குப்பை சேகரிக்கும் நபர்களை கணக்கெடுப்பு நடத்தி ஒருங்கினைத்து 100-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.

 

மேலும் கோயம்புத்தூர் திடக்கழிவு மேலாண்மையின் மூலம் அவர்களுடைய வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் 100 வார்டுகளுக்கும் செல்லும் குப்பைகளை சேகரிக்கும் நபர்கள், உயர்ந்த மதிப்பான குப்பை பொருட்களை மட்டும் எடுத்து வருகின்றனர். மேலும் அவர்களுடைய வருமானத்தை உயர்த்தும் வகையில் குறைந்த மதிப்புள்ள குப்பை பொருட்களையும் சேகரித்து மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மையிடம் வழங்குவதன் மூலம் அவர்களுடைய வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுகிறது.

 

மேலும் அடுத்த கட்டமாக குப்பைகளை சேகரிக்கும் நபர்கள் அனைவருக்கும் சுகாதாரம் சம்பந்தமான விழிப்புணர்வு பயிற்சியும், மருத்துவ சிகிச்சை முகாமும் நடைபெற உள்ளது." இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் தெரிவித்தார்.

 

இந்நிகழ்ச்சியில் உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் ப.காந்திமதி , தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்