கூடலூரில் கண்பரிசோதனை முகாம்

வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2016      நீலகிரி

 

நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் நீலகிரி மாவட்ட ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் கூடலூரில் இலவச கண்பரிசோதனை முகாம் நடைபெற்றது. அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமினை மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்தார். ஆசிவாசி மக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட இம்முகாமில் பிரபல கண் மருத்துவ நிபுணர் டாக்டர் ஹேமந்த்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் கண்பரிசோதனை செய்தார்.

 

நிகழ்ச்சியில் ரெட்கிராஸ் மாவட்ட செயலாளர் மோரீஸ் சாந்தா குரூஸ் மற்றும் ரெட்கிராஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முகாமில் 60_க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்பரிசோதனை செய்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: