முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் அருகே ரயில் போக்குவரத்து பாதித்ததால் பயணிகள் அவதி

வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2016      மதுரை
Image Unavailable

 

திருமங்கலம் அருகேயுள்ள சமத்துவபுரம் பகுதி ரயில்வே கேட்டில் தாழ்தள அரசுப் பேருந்து தரைதட்டி நின்றுவிட்டதால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பயணிகள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.

 

தண்டவாளத்தில் தரைதட்டிய பேருந்து:

 

திருமங்கலம் தாலுகா மேலக்கோட்டை சமத்துவபுரம் விலக்கிலிருந்து டி.அரசபட்டி சென்றிடும் சாலையில் ரயில்வே கேட் உள்ளது.நேற்று காலை 7.30மணியளவில் தூம்பக்குளம் நோக்கி சென்று கொண்டிருந்த தாழ்தள அரசுப்பேருந்து இந்த ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக தரைதட்டி தண்டவாளத்தின் குறுக்கே நகர முடியாமல் நின்றுவிட்டது.இதை தொடர்ந்து பேருந்தை டிரைவர் பலமுறை இயக்க முயற்சித்தும் பேருந்து சிறிதும் நகர்ந்திடாமல் மாட்டிக் கொண்டது.

 

ரயில் போக்குவரத்து நிறுத்தம்:

 

இதனை கண்ட ரயில்வே கேட்கீப்பர் பேருந்து தண்டவாளத்தில் தரைதட்டி நிற்கும் சம்பவம் குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து எச்சரிக்கை செய்தார்.அதன் பேரில் திருமங்கலம் ரயில் நிலையத்தில் செங்கோட்டை பாசஞ்சர் மற்றும் மைசூரு-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலும்,கள்ளிக்குடி ரயில் நிலையத்தில் சரக்குரயிலொன்றும்,திருப்பரங்குன்றத்தில் தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலும்,விருநகரில் ஈரோடு பாசஞ்சர் ரயிலும் நிறுத்தப்பட்டன.

 

பொக்லைன் மூலம் மீட்பு:

 

இதையடுத்து ரயில்வே பொறியாளர்கள் மற்றும் அரசு போக்குவரத்து கழக மீட்பு பணியாளர்கள் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் நீண்ட நேரம் போராடி ரயில்வேகேட் தண்டவாளத்தில் மாட்டிக் கொண்டிருந்த அரசு தாழ்தள பேருந்தினை ஒருவழியாக மீட்டனர்.இதையடுத்து தண்டவாளத்தில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என ரயில்வே பொறியாளர்கள் ஆய்வு செய்த பின்னர் அவ்வழியே ரயில்கள் இயக்கிட அனுமதி தரப்பட்டது.

 

பயணிகள் அவதி:

 

இருப்பினும் தண்டவாளத்தில் தரைதட்டி நின்றுவிட்ட பேருந்தை பொக்லைன் இயந்திரம் கொண்டு மீட்பதற்கு ஒன்றரை மணிநேரத்திற்கு மேலாகி விட்டதன் காரணமாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த ரயில்களில் பயணித்த பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகினார்கள்.இதையடுத்து சுமார் இரண்டு மணிநேர கால தாமதத்துடன் ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக இயக்கப்பட்டு ரயில் போக்குவரத்து சீரானது.அண்மையில் அரசபட்டி ரயில்வே கேட் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகளின் பொது தண்டவாளம் உயர்ந்தும்,தரைபகுதி தாழந்தும் போனதே தாழ்தள பேருந்து தண்டவாளத்தில் சிக்கி கொண்டதற்கான முக்கிய காரணம் என்று தெரிய வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago