முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் உலகின் மிக நீளமான புல்லட் ரயில் பாதை தொடக்கம்

வெள்ளிக்கிழமை, 30 டிசம்பர் 2016      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்  - சீனாவில் கிழக்கு கடற்கரை பகுதியையும் தென்மேற்கு பகுதியையும் இணைக்கும் உலகின் மிக நீளமான ரயில் பாதை  தொடங்கப்பட்டுள்ளது.  உலகில் மக்கள்தொகை அதிகம் உள்ள நாடான சீனாவில் அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன. குறிப்பாக மக்கள் போக்குவரத் துக்கு அதிவேகமான புல்லட் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன் அடுத்தகட்டமாக மிகவும் வளர்ச்சி அடைந்த கிழக்கு கடற் கரை பகுதியையும் வளர்ச்சி குறைந்த தென் மேற்கு பகுதியை யும் இணைக்கும் வகையில் அதிவேகமான புல்லட் ரயில் பாதை தொடங்கப்பட்டுள்ளது.

ஷாங்காய் - குன்மிங் இடையே 2,252 கி.மீ. தூரத்துக்கு இந்த ரயில் பாதை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயில் பாதை ஜிஜியாங், ஜியாங்ஸி, ஹுனான், குய்ஸோ, யுனான் ஆகிய 5 மாகாணங்களை இணைக்கிறது. தற்போது ஷாங்காயில் இருந்து குன்மிங் வரை செல்ல 34 மணி நேரம் ஆகிறது. இந்த புதிய புல்லட் ரயில் பாதையில் 11 மணி நேரமாக குறைந்துள்ளது என்று சீனா ரயில்வே கார்ப்பரேஷன் தகவல் வெளியிட்டுள்ளது.

அதிகபட்ச வேகம் :
இந்த ரயில் மணிக்கு அதிகபட்சமாக 330 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகிறது. சீனாவிலேயே கிழக்கு - மேற்கு பிராந்தியத்தை இணைக்கும் மிக நீளமான ரயில் பாதை இது.
ஏற்கெனவே பெய்ஜிங் - குவாங்ஸோ மாகாணத்தை இணைக்கும் 2,298 கி.மீ. தூர ரயில் பாதை கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
வரும் 2030-க்குள் 45,000 கி.மீ. தூரத்துக்கு ரயில் பாதையை நீட்டிக்கவும் சீனா திட்டமிட் டுள்ளது. புல்லட் ரயில் தொழில் நுட்பத்தை இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு சீனா விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago