முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரச்சினைகளை உருவாக்குகிறது ஐ.நா. : புதிய அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 30 டிசம்பர் 2016      உலகம்
Image Unavailable

 வாஷிங்டன்  - ஐ.நா. சபை பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை. அதற்கு நேர்மாறாக பிரச்சினைகளை உருவாக்கி வருகிறது என்று அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.  இஸ்ரேல் ராணுவம் கைப் பற்றியுள்ள பாலஸ்தீன பகுதி களில் யூத குடியிருப்புகளைக் கட்டக்கூடாது என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அண்மை யில் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த விவகாரத்தில் தற்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஐ.நா.சபையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படவில்லை.
இதுதொடர்பாக அமெரிக்கா வின் புதிய அதிபராக வரும் 20-ம் தேதி பதவியேற்க உள்ள டொனால்டு ட்ரம்ப் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ஐ.நா.சபை கேளிக்கை விடுதி போல செயல்படுகிறது என்று குற்றம் சாட்டினார். இதைத்தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய ட்ரம்ப் ஐ.நா. சபையை கடுமையாக விமர்சித்தார்.

 நேரமும் பணமும் விரயமாகிறது:
ஐ.நா. சபை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அமைப்பாக இருக்க வேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாக அந்த சபை பிரச்சினைகளை உருவாக்கி வருகிறது. இதனால் நேரமும் பணமும் விரயமாகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். அதிபர் பராக் ஒபாமா குறித்து ட்ரம்ப் நேற்று வெளி யிட்ட ட்விட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது: அமெரிக்கா வில் ஆட்சி மாற்றம் சுமூகமாக நடைபெற வேண்டும். ஆனால் அதிபர் பராக் ஒபாமா சில தடைகளை ஏற்படுத்தி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகிறார் என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளை மாளிகை ஊடக ஆலோசகர் பென் ரோட்ஸ் கூறியபோது, அமெரிக்காவின் தற்போதைய அதிபர் பராக் ஒபாமா. அவரது கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி நிர்வாகம் நடைபெறும். ஒரு நாட்டுக்கு ஒரு அதிபர் மட்டுமே இருக்க முடியும் என்று தெரிவித்தார்.
டொனால்டு ட்ரம்புக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறியபோது, ஆட்சி மாற்றத்தில் சில சிக்கல்கள், கருத்து வேறுபாடுகள் எழுந் ருப்பது உண்மைதான். எனி னும் அதிபர் ஒபாமா நிர்வாகத்துடன் நெருங்கி பணியாற்றி வருகிறோம் என்று தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்