முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகர்கோவிலில் தமிழக அரசின் சாதனைகள் விளக்க புகைப்படக்கண்காட்சி: கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் பார்வையிட்டார்

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2016      கன்னியாகுமரி
Image Unavailable

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக, தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து, பொதுமக்கள் அறிந்துகொண்டு, பயன்பெறும் வகையில், நாகர்கோவில், சுமங்கலி திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த சிறப்பு புகைப்படக்கண்காட்சியினை கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் பார்வையிட்டார்.

அம்மா  ஆறாவது முறையாக தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றதுடன் முதலில் ஐந்து முக்கிய திட்டங்களில் கையொப்பமிட்ட புகைப்படங்கள் மற்றும்  ஒவ்வொரு துறையின் வாயிலாக அறிவித்து, செயல்படுத்திய பல்வேறு திட்டங்களின் புகைப்படங்களும்  இக்கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.  இதில் குறிப்பாக,  பிறந்த குழந்தைகளுக்கு தேவைப்படும் 16 பொருட்கள் உள்ளடங்கிய தரமான அம்மா குழந்தைகள் நலபரிசு பெட்டகம், அம்மா மருந்தகம்,  அம்மா உப்பு, அம்மா உணவகம், அம்மா சிமெண்ட், அம்மா குடிநீர், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி, இலவச மடிகனிணி, சீருடைகள், புத்தக பை, பெண்கல்வி உயர்த்துவதற்காக தாலிக்கு தங்கம், வயதானவர்களுக்கு மருத்துவ மற்றும் அன்றாட செலவினை மேற்கொள்ள உதவித்தொகைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகாரணங்கள் போன்ற பல்வேறு திட்டத்தின் சிறப்பு புகைப்படங்கள், கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது.தமிழக அரசின் சாதனைகள் அறிந்துக் கொள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், மிக ஆர்வத்துடன் கண்காட்சியில் பங்கேற்றனர். மேலும் இக்கண்காட்சியில் இடம்பெற்றிருந்த புகைப்படங்கள் மூலம், அரசின் சாதனைகள் நன்கு தெரிந்து கொள்ளப்பட்டது  என பொதுமக்கள் தெரிவித்தனர்.நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  ப.காந்தி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)  நி. சையத்முஹம்மத்,  கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் ந. சுந்தரராஜ், துணிநூல் கட்டுப்பாடு அலுவலர் மா.புதியராஜ், மாவட்ட கூட்டுறவு நூற்பாலை சங்கத்தலைவர்  ச. சகாயராஜ் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்