முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை வெற்றி திட்டமாக மாற்றி காட்டியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ. பெருமிதம்

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2016      கடலூர்
Image Unavailable

சிதம்பரம்

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பரங்கிப்பேட்டை ஒன்றியம் வேளங்கிப்பட்டு கிராமத்தில் நடைபெற்றது. சிறப்பு முகாமிற்கு வட்டர மருத்துவ அலுவலர் மருத்துவர் அமுதா பெருமாள் தலைமை தாங்கினார். சிறப்பு மருத்துவ முகமினை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து பேசுகையில் மறைந்த மான்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திட்டங்கள் யாவும் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் நீண்ட கால பயனினை அளிக்கும் வெற்றி திட்டங்களாகும். அந்த வகையில் தமிழக மக்களுக்கு அதிக பயன் தரும் வகையில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தினை மாற்றி அமைத்து அதனை வெற்றி பெற்ற திட்டமாக மாற்றி காட்டியவர் ஆவார். ஆண்டு வருமானம் ரூ.72,000/- மற்றும் அதற்கு குறைவாக உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும்     இக் காப்பீட்டு திட்டதால் பயனடைந்துள்ளனர். அதுபோல் குடும்பத்தில் மாற்று திறனாளியாக ஒருவர் இருந்தால் அக்குடும்பம் வருமான வரம்பு இன்றி முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப் பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

மேலும் இக்காப்பீட்டு திட்டத்தின் மூலம் ரூ.1.5 இலட்சத்திற்கு மேல் செலவாகும் சிறப்பு அறுவை சிகிச்சைகளுக்கு தமிழக அரசே முழு உதவி தொகையினையும் வகையில் சிறப்பு நிதியினையும் உருவாக்கி தந்தவர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா . அதுபோல் அரசினை தேடி மக்கள் என்ற நிலையினை மாற்றி மக்களை தேடி அரசு என்ற தாரக மந்திரதோடு அரசின் பல்வேறு திட்டங்களை எளிதில் மக்களை சென்றடைய வைத்த பெருமை மாண்புமிகு அம்மா அவர்களையே சாரும். அந்த வகையில் மருத்துவ சேவைகள் கிராம புறத்தில் உள்ள அனைவருக்கும் கிடைத்திடவேண்டும் என்ற உயரிய நோக்கில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் தமிழக அரசின் சுகாதார துறையின் மூலம் கிராமங்கள் தோறும் சிறப்பு மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்துள்ளது. அந்த வகையில் இக்கிராமத்தில் நடைபெறும் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் பெண்களுக்கான சிறப்பு சிகிச்சைகள், மகப்பேறு தொடர்பான அலோசனைகள், பொது மருத்துவ சிகிச்சைகள், அறுவை சிகிச்சை தொடர்பான அலோசனைகள், சித்த மருத்துவம் தொடர்பான அலோசனைகள், மற்றும் பல்வேறு மருத்துவம் தொடர்பான முதற்கட்ட சிறப்பு சிகிச்சைகள், மற்றும் மருத்துவ பரிசோதனைகள் வழங்கப்படுகின்றது என்றும் மேல் சிகிச்சைகளுக்காக பரிந்துரை செய்யபடுவோர் மான்புமிகு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தேவையான உயரிய சிகிச்சைகள் வழங்கப்படும் என்றும் ஆகவே பொது மக்கள் இம்முகாமினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

 நிகழ்ச்சியில் பொது மக்களின் பார்வைக்கு டெங்கு காய்சல் விழிப்புணர்வு மற்றும் ஊட்டசத்து பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மு.அமைச்சர் செல்வி இராமஜெயம்,ஒன்றிய கழக செயலாளர் அசோகன், அவைத்தலைவர் கோ.வி.ராசாங்கம், மு.மாவட்ட கவுன்சிலர் செல்வரங்கன், நிர்வாகிகள் செழியன், மாரிமுத்து, ஆர்.வி.சுவாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

       முகாமில் மருத்துவ அலுவலர்கள் சிவக்குமார், சரண்யா, மிதிலைராஜ், தீபக், பிருந்தா மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவர் பாலாஜி தலைமையில் மருத்துவ குழுவினர் சிகிச்சை மற்றும் மருத்துவ அலோசனைகளை அளித்தனர். முடிவில் ஆயிபுரம் மருத்துவ அலுவலர் சிவக்குமார் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்